

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ளது மெட்ரோபாலிடன் மியூசியம் ஆஃப் ஆர்ட் காஸ்டியூம் இன்ஸ்டிடியூட் என்னும் நவீன உடை வடிவமைப்பு நிறுவனம். இங்கே ஆண்டுதோறும் ஃபேஷன் ஷோ நடைபெறுவது வழக்கம். மனத்தைக் கிறங்கடிக்கும் நவீன பாணி உடையை அணிந்துவரும் பிரபலங்களின் மேடைத் தோற்றம் உலகெங்கிலும் உள்ள உடை பிரியர்களையும் கவர்ந்துவிடும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரபலம் இந்த நிகழ்வில் கலந்துகொள்வார். இந்த ஆண்டில் இந்த ஃபேஷன் ஷோ நிகழ்வின் தொடக்க நாளில் பிரியங்கா சோப்ரா கலந்துகொண்டார். ட்ரென்ச் கோட் ஸ்டைல் கவுனை அணிந்துவந்து அனைவரது கவனத்தையும் அவர் ஈர்த்தார். அவர் அணிந்திருந்த அந்த உடையை வடிவமைத்தவர் ரால்ஃப் லாவ்ரென். அந்த நிகழ்வின் அவரது எழில்மிகு தோற்றம் இங்கே உங்களுக்காக…