

‘ஏதோ இன்ஸ்டாகிராமமாம்ல... அதுல புதுசா, ‘பிரிஸ்மா'ன்னு ஒரு ஃபில்டரை இன்ட்ரொடியூஸ் பண்ணியிருக்கானாம்ல. ஒரு போட்டாவைப் போட்டா, அதை ஓவியமா மாத்திருமாம்ல. இதை வெச்சுக்கிட்டு, நம்ம பயலுவ பண்ற கூத்தைப் பாருங்கப்பு. கார்ட்டூன் கேரக்டருல இருந்து, கக்கூஸ் போற மாதிரி போஸ் கொடுக்கிற வரைக்கும் இவனுங்க பண்ற அட்டூழியம் தாங்கலை. ரோட்ல போற எருமைய போட்டோ புடிச்சு, ஒடம்புக்கெல்லாம் பெயின்ட் அடிச்ச மாதிரி மாத்திப்புடுறானுங்க. ஏற்கெனவே மேக்கப் போட்ட ஆக்டுரஸ்ஸுக்கு, இந்த ஸ்பெஷல் எஃபெக்ட்டை ஏத்தி அலற விடுறானுங்க.
இந்த ‘பிரிஸ்மா' படங்களை வேற அவனவன் ஷேர் பண்ணி நம்மளை ‘சைன் அவுட்' பண்ண வைக்கிறாங்க. ஏய்யா... என்னதான் டெக்கினாலஜி வளர்ந்தாலும், நம்ம கையால வரையுற ஓவியங்கள் பண்ற மாதிரி ஜாலங்கள் வருமாய்யா..? அட, அதைக்கூட விடுங்கப்பு... இயல்பா, இயற்கையா இருக்குறதுதான உண்மையான அழகு..!' என்று ‘பிரிஸ்மா' அறிமுகமான இரண்டாவது நாளில், தன் சோஷியல் மீடியா வலைத்தளங்களில் ‘ஸ்டேட்டஸ்' பகிர்ந்தான் நெட்ராசு. இந்தப் படங்கள் எல்லாம் அவனின் அக்கவுன்ட்டில் இருந்து சுட்டவைதான். அப்புறம் யாருகிட்டயும் சொல்லிடாதீங்க... அவனுடைய ப்ரொஃபைல் பிக்சரில் ‘பிரிஸ்மா' என்ற வாட்டர்மார்க்கை அழிக்க அவன் மறந்துவிட்டான்!