கூகுள் கிளாசுக்கு நான் அடிமை

கூகுள் கிளாசுக்கு நான் அடிமை
Updated on
1 min read

உறங்குவதற்காக மட்டுமே கூகுள் கிளாசைக் கழற்றும் பழக்கமுள்ள ஒரு நபருக்கு அவரது இணைய அடிமை மோகத்திலிருந்து மீட்க சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

அந்த மனிதர் ஒரு நாளைக்கு 18 மணி நேரம் அந்த கூகுள் கிளாசுடன் ‘வாழ்ந்து’ வந்தார். கூகுள் கிளாசை அகற்றிய நேரத்தில் எரிச்சலான மனநிலையுடன் காணப்பட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். கூகுள் கிளாசை வாங்கி இரண்டு மாதங்களுக்குப் பிறகு உறக்கத்தில் காணும் கனவுகள்கூட, அவருக்கு கூகிள் கிளாசின் சிறிய க்ரே விண்டோ (சட்டகம்) வழியாக வருவதாக அவர் கூறுகிறார்.

தொலைபேசிக் கருவிகள், கணினிகளுக்கு அடிமையாகும் பயனாளிகளின் மனநிலை பற்றி, உளவியலாளர்கள் தொடர்ந்து ஆராய்ச்சி செய்துவருகின்றனர். இதுதொடர்பாகப் பல்வேறு நபர்களிடம் தோன்றும் சிக்கல்கள், பல்வேறு மனநோய்ப் பிரச்சினைகளின் வெளிப்பாடுகள் என்று கருதப்படுகின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in