டர்ரியல் டைம்ஸ்

டர்ரியல் டைம்ஸ்
Updated on
1 min read

‘ஆன் இன்ஸ்பிரேஷன் ஃப்ரம்’ கொரிய காவியம்

ராமாயணம், மகாபாரதம் போன்ற காவியங்களால் இன்ஸ்பயர் ஆகி படம் எடுத்து, அந்தக் காவியங்களுக்கே பெருமை சேர்த்தவர் மூத்த இயக்குநர் பெல் டைமண்ட் சார். ஆனா, கடைசியில இப்படி டீன் ஏஜ் பசங்க பார்த்து ரசிக்கிற கொரியன் சீரியலைப் பார்த்து சீனையும் டயலாக்கையும் சுட்டுட்டாரே என்பதுதான் ‘பெல் ஃபேன் கிளப்’பின் லேட்டஸ்ட் கவலை.

எம்.பி.யை அவமதித்த விமான நிறுவனம்: தலைவர்கள் கண்டனம்

கையில் சிக்கிய ‘ஏர் இந்தியா’ அதிகாரியை வெளுத்து வாங்கிய ‘தன்மானச் சிங்கம்’ சிவசேனை எம்.பி. ரவீந்திர கெய்க்வாட், விமானத்தில் வலது கால் எடுத்து வைக்க ஏர் இந்தியா தடை விதித்திருந்தது. இந்த மக்கள் பிரச்சினைக்காக நாடாளுமன்றத்தில் சக எம்.பி.க்களுடன் தீவிரமாகப் போராடிய ரவீந்திர கெய்க்வாட்டுக்கு, கடைசியில் ஒரு வழியாக விமானத்தில் பயணம் செய்வதற்கு ஏர் இந்தியா நிறுவனம் அனுமதித்திருப்பதை எல்லா அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டித்துள்ளனர். இதை ஏன் முன்னதாகவே வழங்கவில்லை என்பதுதான் அவர்களுடைய கேள்வி.

மெட்ரோ ரயில் பாதையில் பஸ் ஓட்ட சதி: தீவிரவாதிகள் முயற்சி முறியடிப்பு

பாரம்பரியம் மிக்க சென்னை அண்ணா சாலையில் அமெரிக்கத் தூதரகம் அருகிலேயே மெட்ரோ ரயில் பாதையில் பஸ்ஸை ஓட்ட தீவிரவாதிகள் சதித் திட்டம் தீட்டியிருந்தனர். நல்ல வேளையாக, இந்த முயற்சியை உரிய நேரத்தில் கண்டறிந்த காவல்துறை, மெட்ரோ பாதைக்குள் பஸ் நுழைவதற்கு சற்று முன்னால் பஸ்ஸையும் போனஸாக ஒரு காரையும் தடுத்து நிறுத்தி சாதனை புரிந்துள்ளது. தீவிரவாதிகளின் சதி முறியடிக்கப்பட்ட இடத்தை லோட்டஸ் கட்சியின் தலைவர் இயலிசை பார்வையிட்டபோது எடுத்த படம்.

கறுப்புதான் எனக்குப் புடிச்ச கலரு

கறுப்பு எனக்கு பிடிக்காதுன்னு சொல்லல. கறுப்பும் எனக்குப் புடிச்ச கலருதான். ஆனா, சிவப்பா இருக்கக்கூடாதுன்னு ஏன் நினைக்கணும்? சிவப்பா இருந்தா நல்லாயிருக்குமேன்னுதானே நான் சொல்றேன். தயவு செஞ்சு என்னை புரிஞ்சுக்குங்க. - ‘வடஇந்திய வள்ளுவர்’ கருண் கஜய்

‘பீ கேர்புல்’: நான் விவசாயிகளைச் சொன்னேன்

“விவசாயக் கடன் தள்ளுபடி குறித்த வாக்குறுதிகளை தவிர்க்க வேண்டும்.” - ரிசர்வ் செய்யப்படாத வங்கியின் தலைவர் ஊர்ஜித படேலின் புதிய கண்டுபிடிப்பு சார், ஒரு சின்ன சந்தேகம். சொல்லாமக் கொள்ளாம லண்டனுக்கு எஸ்கேப் ஆன விஜய் மல்லையாவின் கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸ் உட்பட பல நிறுவனங்களுக்கு எஸ்.பி.ஐ. ரூ. 7000 கோடி கடன் தள்ளுபடி செஞ்சதே, அதுக்குப் பேரு என்ன சார்?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in