

படிப்பு ஒரு பக்கம், நடிப்பு ஒரு பக்கம் என இரட்டைக் குதிரை சவாரி செய்து வருகிறார் மனிஷா. ‘களவாணி' படத்தில் விமலின் தங்கையாக நடித்தவர். ‘சைல்ட் ஆர்டிஸ்ட்' ஆக அசத்தியவருக்கு இப்போது ‘ஹீரோயின்' ப்ரமோஷன். அவருடன் ஒரு ‘டீ டைம்' மீட்டிங்.
முதல் சினிமா சான்ஸ்...?
அம்மாதான் எனக்குப் பெரிய சப்போர்ட். சின்ன வயசுல இருந்தே நான் சீரியல்ல நடிக்க ஆரம்பிச்சுட்டேன். ஏ.வி.எம். நிறுவனம் தயாரிச்ச ‘நிம்மதி', ‘நாணயம்' உட்பட 35 சீரியல்கள் வரைக்கும் நடிச்சிருக்கேன். அதைப் பார்த்துட்டுத்தான் சினிமாவுல நடிக்க சான்ஸ் கொடுத்தாங்க. நிறைய படங்களைப் பார்த்துத்தான் நடிக்கக் கத்துக்கிட்டேன். இயக்குநர் பாலுமகேந்திரா சார் கூட ஒரு தடவை என்னை வெச்சு ‘போட்டோ ஷூட்' பண்ணியிருக்கார். அதை நினைச்சு நான் இப்பவும் பெருமைப்படறேன்.
நான் நடிச்ச முதல் படம் ‘நிறம்'. அதுல ஹீரோவுக்குத் தங்கச்சி கேரக்டர் பண்ணியிருப்பேன். அதுக்கு அடுத்து ‘பிரிவோம் சந்திப்போம்', ‘வைத்தீஸ்வரன்'னு சில படங்கள் கிடைச்சுது. ஏழு வயசுல இருந்து நான் ‘ஃபீல்ட்'ல இருக்கேன். சீரியல், படங்கள்னு நான் நடிச்சிருந்தாலும், என்னை ‘களவாணி' படம்தான் தூக்கிவிட்டுச்சு.
படிப்பா... சினிமாவா..?
நான் இப்போ எஸ்.ஆர்.எம். காலேஜ்ல ஃபைனல் இயர் விஸ்காம் படிக்கிறேன். நான் நடிப்புத் துறைல இருக்கிறதால, இந்தப் படிப்பைத் தேர்வு செஞ்சேன். இப்போ எனக்கு டைரக் ஷன் மேலயும் இன்ட்ரஸ்ட் வந்திருக்கு.
சினிமாவுல நடிக்கறதால என்னுடைய படிப்புக்கு எந்தப் பாதிப்பும் வரலை. நான் படிச்ச ஸ்கூல்லயும், படிக்கிற காலேஜ்லயும் சப்போர்ட் பண்றாங்க. அதனாலதான் என்னால படிப்பையும் சினிமாவையும் ‘பேலன்ஸ்' பண்ண முடியுது. இதோ, இப்ப வரைக்கும் எல்லா செமஸ்டர்கள்லயும் நல்ல மார்க்ஸ் ஸ்கோர் பண்ணதால, எனக்கு கோல்ட் மெடல் கூட கொடுத்திருக்காங்க!
டீரீம் கேரக்டர்...?
எந்த கேரக்டர் கொடுத்தாலும் அதை நிறைவா பண்ணிடனும். அவ்ளோதான்!
மறக்க முடியாத பாராட்டு...?
‘களவாணி' படத்துல வரும் ‘அண்ணா எனக்கு ரப்பர் வெச்ச பென்சில் வாங்கிக் கொடு'ங்கிற வசனத்தை என் ஃப்ரெண்ட்ஸ் அடிக்கடி நடிச்சுக் காட்டச் சொல்வாங்க. அதுவே பெரிய பாராட்டுதானே..?
அடுத்த படங்கள்..?
இப்போதைக்கு ‘அழகான நாட்கள்' அப்படிங்கிற படத்துல ஹீரோயினா நடிச்சிட்டு வர்றேன். இந்தப் படம் கிருஷ்ணகிரில ஷூட்டிங் போய்ட்டிருக்கு. அடுத்து இன்னும் இரண்டு படத்துல ‘கமிட்' ஆகி இருக்கேன்.