சிறிய இடத்தில் பெரிய வீடு!

சிறிய இடத்தில் பெரிய வீடு!
Updated on
1 min read

இன்றைய தேதிக்குப் பெரிய வெங்காயத்தையே வாங்க முடியவில்லை. இதில் பெரிய அளவில் வீட்டை எங்கே வாங்குவது? அதனால்தான் சிறுகக் கட்டி பெருக வாழும் கொள்கையை நோக்கி அனைவரும் நகரத் தொடங்கிவிட்டார்கள். சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் மட்டுமல்லாமல், அப்பார்ட்மெண்ட் வீடுகள் எங்கெங்கும் காணக் கிடைக்கின்றன.

இருக்கிற இடத்தைப் பெரிதாக்கிக் காட்டுகிற சூட்சுமம் தெரிந்துவிட்டால், சிறிய வீடும் சொர்க்கம்தான். 550 சதுர அடியில் கட்டப்பட்ட வீட்டை, லிவிங் ஏரியா அதிகம் இருப்பதுபோல வடிவமைத்தால் எப்படி இருக்கும்? அதற்கு வழிகாட்டுகிறார் அக்ஷயா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் சிட்டிபாபு.

“எதையுமே திட்டமிட்டுச் செய்தால், சிறிய இடத்தைக்கூட சிங்காரமாக்கலாம். 450 சதுர அடி லிவிங் ஏரியாவாக இருக்கும்பட்சத்தில், அதை இரண்டு படுக்கையறை கொண்ட ஃபிளாட்டாக வடிவமைக்கலாம். லிவிங், டைனிங், கிச்சன் மூன்றையும் ஹாலின் பகுதிகளாக வடிவமைக்கலாம். படுக்கையறையில் டாய்லெட், பாத்ரூம், ஷவர், வாஷ் பேஸின் இவற்றை ஒரே அறையில் வைப்பதால் இடம் அதிகமாகச் செலவாகும். இதைவிட சின்னதாக டாய்லெட், அதை ஒட்டி பாத்ரூம், அதற்கு வெளியே வாஷ்பேசின் என மூன்றாகப் பிரித்து அமைத்தால் இடமும் மிச்சமாகும். ஒரே நேரத்தில் மூன்று பேர் பாத்ரூம் ஏரியாவைப் பயன்படுத்தலாம்.

லிவிங் ஏரியாவில் பால்கனியும் வைக்கலாம். அதை அவரவர் வசதிக்கு ஏற்ப பால்கனியாகவோ, சர்வீஸ் ஏரியாவாகவோ பயன்படுத்தலாம். இப்படிச் செய்வதால் பணமும் குறைவாகச் செலவாகும், பலனும் அதிகமாகக் கிடைக்கும். பார்க்கிறவர்களுக்கு வீடும் பெரிதாக இருப்பது போல தோன்றும்” என்று குறிப்புகள் தருகிறார் சிட்டிபாபு.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in