சுவையான மின்னஞ்சல்கள்!

சுவையான மின்னஞ்சல்கள்!
Updated on
1 min read

உலகில் மின்னஞ்சல்கள் வந்த பின்பு தகவல் தொடர்பு எளிமையாகிவிட்டது. அதன் பயன்பாடுகளும் அதிகமாகிவிட்டன. உலகம் முழுவதும் இந்த மின்னஞ்சல்கள் வழியாகப் பல்வேறு பரிமாற்றங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இந்த மின்னஞ்சல் பரிமாற்றங்களில் ஆங்கில மொழியிலான சுவையான மின்னஞ்சல்களைத் தனியாகத் தொகுத்தளிக்கும் வழியில் ஒரு இணையதளம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

இந்த இணையதளத்தில் வேடிக்கையான மின்னஞ்சல்கள் (Funny Emails), படத்திலான மின்னஞ்சல்கள் (Picture Emails), குறுங்கதை மின்னஞ்சல்கள் (Short Story Emails), கல்விசார் மின்னஞ்சல்கள் (Educational Emails), சுவையான உண்மைகள் (Interesting Facts), நட்புக்கான மின்னஞ்சல்கள் (Friendship Emails), அலுவலக மற்றும் பணிகளுக்கான மின்னஞ்சல்கள் (Office & Work Emails) எனும் முதன்மைத் தலைப்புகள் இடம்பெற்றிருக்கின்றன. இத்தலைப்புகளில் தலைப்புடன் தொடர்புடைய மின்னஞ்சல்கள் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.

இவை தவிர, மின்னஞ்சல் வகைகள் (Email Categories) எனும் தலைப்பில் பல்வேறு தலைப்புகளின் கீழ் மின்னஞ்சல்கள் வகைப்படுத்தப்பட்டிருக்கின்றன. இத்தலைப்புகளில் ஒவ்வொரு வகையின் கீழும் எத்தனை மின்னஞ்சல்கள் இடம்பெற்றிருக்கின்றன என்பதை அடைப்புக் குறிக்குள் இட்டுள்ளனர்.

இவற்றின் வழியாக நாம் விரும்பும் தலைப்பினுள் சென்று அங்குள்ள மின்னஞ்சல்களைப் படித்து மகிழலாம். அதை நண்பர்களுக்கோ உறவினர்களுக்கோ அனுப்பலாம். இதுபோல் இத்தளத்தில் நாமும் மின்னஞ்சல்களை சமர்ப்பிப்பதற்கும் வசதி உள்ளது.

மின்னஞ்சல்களில் புதிய செய்திகளை அறியவும், சுவையான தகவல்களைப் பகிர்ந்து கொள்ளவும் பயனுள்ளதாய் இருக்கும் இந்த இணையதளத்தினைப் பயன்படுத்த> http://www.interestingemails.com/ எனும் இணைய முகவரிக்குச் செல்லலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in