

1. ஒரு தவளை ஒரு குழியில் விழுந்து விட்டது. அந்தக் குழியிலிருந்து மேலே வர 15 படிக்கட்டுகள் ஏறவேண்டும். பகலில் 3 படிக்கட்டுகள் ஏறும் தவளை இரவில் 2 படிக்கட்டுகள் இறங்கி விடும். அப்படியானால் எத்தனை நாட்களில் 15 படிக்கட்டை ஏறும்?
2. ஒரு மரத்தில் 20 பறவைகள் இருக்கின்றன. ஒருவர் தன் துப்பாக்கியால் ஒரு பறவையைச் சுட்டுவிடுகிறார். மீதம் எத்தனை பறவைகள் இருக்கும்?
3. நான் பார்க்கும் இடங்களில் குளங்கள் இருக்கின்றன. ஆனால் தண்ணீர் இல்லை. தெருக்கள் இருக்கின்றன. ஆனால், கார்கள் இல்லை. எப்படி?
4. ஊதா வண்ண வீடு ஒன்று தரை தளத்தில் இருக்கிறது. அங்கு வசிக்கும் நபர் ஊதா நிறத்தில் இருக்கிறார். கொஞ்சம் சுற்றிப் பார்த்தால் அந்த வீட்டில் இருக்கும் மொபைல் போஃனும் ஊதா, பூனையும் ஊதா, நாயும் ஊதா, நாற்காலிகூட ஊதா நிறம்தான். அப்படி என்றால் அந்த வீட்டுப் படிக்கட்டின் நிறம் என்ன?
5. ஏழைகளிடம் அது இருக்கும். பணக்காரர்களுக்கு அது தேவை இல்லை. அதை சாப்பிட்டால் நீங்கள் இறந்துவிடுவீர்கள். அது என்ன?
பதில்
1. 14 நாள்கள். தினமும் பகலில் 3 ஏறி இரவில் 2 இறங்குமென்றால்,13
நாட்களில் 13 படிகள். 14-ம் நாள் பகலில் 3 அடி தாவும்போதே வெளியே சென்றுவிடும்.
2. ஒன்றுகூட இருக்காது. துப்பாக்கி் சுடும் சத்தம் கேட்டதும் எல்லாம் பறந்து போய்விடும்.
3. நான் பார்த்துக்கொண்டிருப்பது வரைபடம் (map)
4. தரை தளத்தில் இருக்கும் வீட்டுக்கு, ஏது மாடி?
5. ‘ஒன்றுமில்லை’
தொகுப்பு: சுசி.ம