

சென்ற ஆண்டு பொதுஜன ஊடகம் மற்றும் சமூக ஊடகங்களில் ‘வைரலான' படங்கள் இவை. ஜனவரியில் பிரான்ஸ் நாட்டில் நடந்த ‘சார்லி ஹெப்தோ' தாக்குதல் முதல் டிசம்பரில் ஏற்பட்ட சென்னை வெள்ளம் வரை ஒளிப்படங்கள் வழியே ஒரு ‘ஃப்ளாஷ்பேக்'...
ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் தம்பதி தங்களின் குழந்தையுடன்...
முதன்முறையாக நடந்த சர்வதேச யோகா தினத்தின் போது...
செவ்வாயில் நீர் இருப்பதற்கான ஆதாரங்கள் உள்ளன என்று பிரபல விண்வெளி ஆராய்ச்சி நிலையமான ‘நாசா' வெளியிட்ட படம்...
நேபாள நிலநடுக்கத்தின்போது..
‘சார்லி ஹெப்தோ' பத்திரிகை மீது நடத்தப்பட்ட தாக்குதலை எதிர்த்து மக்கள் அணி திரண்டபோது...
பாரிஸ் நகரத்தின் மீது ஐ.எஸ். அமைப்பினர் தாக்குதல் நடத்தியபோது...
ஜிம்பாவே நாட்டில் வாழ்ந்து வந்த செசில் என்ற சிங்கம் வால்டர் பால்மர் எனும் மருத்துவர் ஒருவர் சுட்டுக்கொன்றதை எதிர்த்து அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாணத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது...
சர்வதேச கால்பந்தாட்டப் பேரவையான 'ஃபிஃபா'வில் நடைபெற்ற ஊழல்கள் வெளிச்சத்துக்கு வந்தபோது அதன் தலைவர் செப் ப்ளாட்டர் மீது பிரிட்டிஷ் நடிகர் லீ நெல்சன் போலி டாலர் நோட்டுகளை வீசி எறிந்தபோது..
மியான்மர் நாட்டிலிருந்து தப்பித்து வேறு நாடுகளுக்கு அகதிகளாகச் செல்லும் ரோஹிங்கியா இஸ்லாமியர்கள்... | மரங்கொத்திப் பறவை ஒன்றின் மீது அமர்ந்து கொண்டு வீசல் ஒன்று பறக்கும் இந்த ஒளிப்படத்தை மார்டின் லு மே என்பவர் எடுத்தார். சென்ற வருடத்தின் ஆகச் சிறந்த பறவைப் படம் இது!
தைவான் நாட்டில் ‘ட்ரான்ஸ் ஆசியா' விமானம் விபத்துக்குள்ளானபோது...
கிரீஸ் நாடு கடனில் தத்தளித்தபோது, தனது ஓய்வூதியத்தைப் பெற முடியாமல் கதறி அழுத முதியவர்
சென்னை வெள்ளத்தின்போது
சிரியா நாட்டுப் போரால் அங்கிருந்து தப்பித்துத் தனது குழந்தைகளுடன் வேறு நாட்டுக்குத் தஞ்சம் தேடி வரும் ஒரு தந்தை...
சிரியா போரிலிருந்து தப்பித்து தனது குழந்தைகளுடன் வேறு நாட்டுக்கு அகதியாக ஓடி வந்துகொண்டிருந்தவரை, தொலைக்காட்சி நிருபர் ஒருவர் தன் காலால் இடறி விழச் செய்தபோது...