

பிரைடல் லுக் என்றதும் ஜூவல்லரி அணிவதைக் குறைத்துக்கொண்டு மேக்கப் விஷயத்திலேயே யுவதிகள் அதிகக் கவனம் செலுத்துவது நவீன டிரெண்டாகியுள்ளது. சென்னை துரைப்பாக்கத்தில் புதிய கிளையைத் தொடங்கியுள்ள ‘அனுஷ்கா சலூன் அண்ட் ஸ்பா’ சமீபத்தில் பிரைடல் லுக்கில் மாடல்களின் அணிவகுப்பை நடத்தியது. தென்னிந்தியா, வங்காளம், வட இந்தியா என்று கலாசார முக்கியத்துவம் நிறைந்த ஃபேஷன் ஷோவாக இந்நிகழ்ச்சி கவர்ந்தது.