வாட்ஸ் அப் கலக்கல்: பணமில்லா பொருளாதாரம்

வாட்ஸ் அப் கலக்கல்: பணமில்லா பொருளாதாரம்
Updated on
2 min read

செந்தில்: அண்ணே, Cashlessங்கறாங்க, Card யூஸ் பண்ணுங்கன்றாங்க, Swipe மெஷின் அப்படீங்கறாங்க எனக்கு ஒன்னும் புரியலண்ணே!

கவுண்டமனி: அடேய், இப்போ கல்யாணத்துக்கு மாப்பிளையோ, பொண்ணோ பாக்கணுன்னா என்ன பண்ணுவே?

செந்தில்: ஒரு ப்ரோக்கர் கிட்டே சொல்லி நல்ல இடமா பாக்க சொல்வேன்....

கவுண்டமனி: அப்படி பாத்துகுடுத்தவுடனே அவர் என்ன கேப்பார்?

செந்தில்: கமிஷன் கேப்பார்..

கவுண்டமணி: சரி , ஒரு பிளாட், அல்லது வீடு வங்கணுன்னா என்ன பண்ணுவே?

செந்தில்: ஒரு நில ப்ரோக்கர் கிட்ட சொல்வேன். அவர் நல்ல இடமா பாத்து குடுப்பார். நான் கமிஷன் குடுப்பேன். அதான நீங்க சொல்ல வரீங்க...

கவுண்டமனி: பரவால்லயே புத்திசாலியா இருக்கியே...அதே மாதிரி தான் இந்த கார்டு, cashless எல்லாம். இனிமே அரிசி ,பருப்பு, புளி, உப்பு எல்லாம் வங்கணும்னா குறைஞ்சது 2% கமிஷன் கொடுக்கணும்.

செந்தில்: போங்கண்ணே, இதுக்கெல்லாமா கமிசன் கொடுப்பாங்க?

கவுண்டமனி: ஆமாண்டா, இப்போ நீ உன் பாக்கெட்ல இருந்து பணத்தை எடுத்து கடைக்காரர்கிட்ட குடுக்கிற. அவர் வாங்கி கல்லாவுல போட்டுக்குறார். ஆனா கார்டு உரசினா உன் பேங்க் அக்கௌன்ட்ல இருந்து கடைக்காரர் அக்கவுண்ட்ல போடணும் இல்ல அந்த வேலைய செய்யறதுக்கு தான் இந்த கமிஷன்.

செந்தில்: இந்த கமிஷன் யாருக்கு போகும்ண்ணே?

கவுண்டமனி: இந்தியாவில SBI தவிர எந்த அரசாங்க பாங்கும் உரசுற மெசின் கொடுக்கறதில்லை... அதனால நாம உரசுறதால வர்ற எல்லா கமிஷனும் தனியார் முதலாளிகளுக்கு தான் போகும், அது போக, PAY TM மாதிரி கமிஷனுக்குனே நடக்குற கம்பெனிக்கும் போலாம். எப்படியானாலும் அத வியாபாரிதான் கட்டணும். அத அவர் பொருள் விலையில் ஏத்திடுவாரு, அல்லது நம்மகிட்ட அதிகமா பில் போடுவாரு.

செந்தில்: அப்போ நான் ஒரு மாசத்துக்கு 20000 ரூபா செலவு பண்ணா 400 ரூபா கமிஷனுக்கே போய்டுமா?

கவுண்டமனி: கரெக்ட், அதே தான். இது மாதிரி இந்தியாவுல 100 கோடி பேர்கிட்ட இருந்து மாசம் சராசரியா 400 ரூபா கமிஷன் அடிச்சா மொத்தம் எவ்வளவு?

செந்தில்: 400×100=40000 கோடிண்ணே!

கவுண்டமனி: கணக்கில் கில்லாடியா இருக்கியே? அப்ப வருஷத்துக்கு 40000×12=480000 கோடி ஆகும்.

செந்தில்: அண்ணே தல சுத்துதண்ணே! இதென்ன அண்ணே பகல் கொள்ளையாயிருக்கு? இதிலிருந்து தப்பிக்க வழியே இல்லையா?

கவுண்டமனி: சத்தமா சொல்லாதடா, அப்புறம் உனக்கு தேசபற்றே இல்ல , பாகிஸ்தானுக்கு போன்னு சொல்லிடுவாங்க!

பளிச் வாட்ஸ் அப் பகிர்வுகளை நீங்களும் அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ilamaiputhumai@thehindutamil.co.in

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in