

1. பூக்கள் அழகானவை. மனத்திற்குப் புத்துணர்வு அளிப்பவை. வீட்டின் வரவேற்பரையில் அழகான பூங்கொத்துகளை வைப்பது மனமகிழ்ச்சி அளிக்கும். இயற்கையான பூங்கொத்தோ அல்லது செயற்கையான பூங்கொத்தோ வைக்கலாம்.
2. வீட்டின் சுவர்களில் அழகான வேலைப்பாடுகள் உள்ள ப்ரேம்களில் புகைப்படங்களை மாட்டி வைத்து அழகு செய்யலாம். நம் மனதிற்குப் பிடித்த ஓவியங்கள், வண்ணங்கள், இயற்கைக் காட்சிகள் எதை வேண்டுமானாலும் கொண்டு அழகுபடுத்தலாம்.
3. வீட்டின் நிறத்திற்குத் தகுந்தாற்போல ஜன்னல் சீலைகளைத் தேர்ந்தெடுத்து அணிவிக்கலாம்.அது காண்பவரைவசீகரிக்கும்.
4.வீட்டை சற்று ஆடம்பரமாக மற்றும் செலவில்லாமல் அலங்கரிக்க வேண்டுமென்றால், வீட்டின் சோபா அல்லது மெத்தைகள் மீது அழகான குஷனை ஆங்காங்கு வைத்து அலங்கரிக்கலாம். இதனால் படுக்கும் அறை மற்றும் ஹாலில் உள்ள சோபாக்கள் சற்று ஆடம்பரத்துடன் காணப்படும்.
5.சோபாக்களுக்கு உரை தேர்வுசெய்யும்போது அது வீட்டின் வண்ணத்திற்குத் தகுந்தாற்போல இருப்பதாகப் பார்த்துக்கொள்ளலாம்.
6.வீட்டில் உள்ள பழமையான பொருட்களைப் பரணில் போட்டுவிடாமல் கெண்டி, பழைய வெண்கலப் பாத்திரங்கள், பழைய புகைப்பட ப்ரேம்கள் போன்றவற்றை துடைத்து வீட்டை செய்யலாம்.