

தேவையான பொருட்கள்
நேந்திரன் வாழைக்காய் 1, தேங்காய்த் துருவல் அரை டம்ளர், மிளகு அரை தேக்கரண்டி, மிளகாய் வற்றல் 4, மஞ்சள் தூள் கால் தேக்கரண்டி, வெள்ளைப் பூண்டு 1, சீரகம் 1 தேக்கரண்டி, கறிவேப்பிலை, உளுத்தம் பருப்பு, கடுகு, எண்ணெய், உப்பு தேவைக்கு ஏற்ப.
செய்முறை:
தேங்காய்த் துருவலை சிறிது எண்ணெய் விட்டுப் பொன்னிறமாக வைக்கவும். நேந்திரன் காயின் தோல் நீக்கி, நீண்டவாக்கில் இரண்டாக நறுக்கவும். பிறகு இரு துண்டுகளையும் சிறு சிறு துண்டுகளாக நறுக்கிவைத்துக்கொள்ளவும். மிளகாய் வற்றல், மிளகு, வெள்ளைப்பூண்டு, சீரகம், மஞ்சள்தூள் ஆகியவற்றை விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
நேந்திரன் துண்டுகளை போதிய அளவு நீர் சேர்த்து வேக வைக்கவும். முக்கால் பாகம் வெந்ததும் மசாலா விழுதுடன் உப்பு சேர்த்து தொடர்ந்து வேக விடவும். கலவை நன்கு வெந்து கமகம என மசாலா மணம் வந்தவுடன் வறுத்த தேங்காய்த் துருவலைக் கலக்க வேண்டும். உளுந்தம் பருப்பு, கடுகு, கறிவேப்பிலை ஆகிவற்றைத் தாளித்து குழம்பில் இட்டு இறக்கினால் சுவையான நேந்திரன் எரிசேரி தயார்.
உத்ரா ஆனந்த், நாகர்கோயில்