

இந்தியா சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள். இதுவே ஒரு 'ஹைலைட்' என்றால், இந்த ஆண்டில் கூடுதல் சிறப்பு... பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்கள் வரும் 23ம் தேதி வரை இந்த ஆண்டுக்கான சுதந்திர தின விழா நிகழ்ச்சிகளைக் கொண்டாட வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருப்பது!
அரசியல், வறுமை, தொழில்நுட்ப வளர்ச்சி, பெண் முன்னேற்றம், ஊழல் என இந்த 70 ஆண்டுகளாக இந்தியாவைப் பல சாதனைகளுக்கும் பல சோதனைகளுக்கும் உள்ளாக்கும் சில விஷயங்களைப் பற்றி ‘இணைய இளைஞர்கள்' ட்விட்டரில் நறுக்குத் தெறித்தது போல தங்கள் சிந்தனைகளைப் பந்தி வைத்துவிட்டார்கள். இவை நம் நாட்டின் நிலை பற்றி ஒரு குறுக்குவெட்டுப் பார்வையைத் தருவதாகவும் கொள்ளலாம். அவற்றில் சில இங்கே...