36 ட்வீட்டில் மகாபாரதம்

36 ட்வீட்டில் மகாபாரதம்
Updated on
1 min read

வியாசர் எழுதிய மகாபாரதம் ஒரு லட்சம் செய்யுள்களையும் 18 காண்டங்களையும் கொண்டது. இவ்வளவு பெரிய இதிகாசத்தை 36 ட்வீட்களில் சுருக்கி சாதித்துள்ளார் புராணக்கதை எழுத்தாளர் தேவ்தத் பட்நாயக். இந்த 36 ட்வீட்களையும் 40 நிமிடங்களில் எழுதி வெளியிட்டுள்ளார் தேவ்தத்.

முதல் ட்வீட்

தந்தையின் காதலுக்காக பிரம்மச்சரியம் மற்றும் அதிகாரத்தைத் துறந்தான் ஹஸ்தினாபுர இளவரசன் பீஷ்மன்.

2. மீனவப் பெண் சத்யவதியின் இரண்டு மகன்களும் குழந்தையில்லாமல் இறந்துபோகின்றனர். இரண்டு விதவைகளும் தங்களின் வாரிசைப் பெறுவதற்காக வியாசர் அழைக்கப்படுகிறார். இரண்டு மகன்கள் பிறக்கின்றனர். ஒருவர் குருடர். இன்னொருவர் வெளுத்த தோலுடையவர்.

3. வெளிறிய தோல் கொண்ட பாண்டு அரசாட்சியைப் பிடித்தான். இரண்டு மனைவிகள். பெண்ணைத் தொட்டால் மரணம் என்ற சாபம். குழந்தைகள் இல்லை. வனம் புகுதல்.

4. மூத்தவன் திருதராஷ்டிரன் ஆட்சிக்குப் பொறுப்பேற்கிறான். அவன் மனைவி காந்தாரி தன் கண்ணைக் கட்டிக் கொள்கிறாள்.

5. பாண்டுவின் முதல் மனைவி குந்தி, மந்திரத்தைப் பயன்படுத்தி மூன்று கடவுளர்கள் மூலம் மூன்று மகன்களைப் பெற்றாள். இரண்டாவது மனைவி மாத்ரி மந்திரங்களைப் பயன்படுத்தி இரண்டு மகன்களைப் பெற்றாள்.

வியாசரின் மகாபாரதத்தில் பாண்டவர்கள் பிறப்பதற்கு பல நூறு பக்கங்களை படிக்கவேண்டும். ஆனால் தேவ்தத்தோ பாண்டவர்கள் ஐந்து பேரையும் ஐந்தாவது ட்வீட்டில் பிறக்கவைத்துவிட்டார்.

36-வது ட்வீட்டிற்குள் குருக்ஷேத்திரம் முடிந்து யுதிர்ஷ்டர் அரசாட்சிக்கு வந்து, பின்னர் ஆட்சியைத் துறந்தும் விடுகிறார். 140 எழுத்து சவாலில் தேவ்தத்தின் இந்த முயற்சி இளைஞர்களையும் மகாபாரதம் நோக்கி இழுத்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

@devduttmyth

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in