மதுவுக்கு நீதி உண்டா?

மதுவுக்கு நீதி உண்டா?
Updated on
1 min read

ரு வாரங்களுக்கு முன்பு கேரளாவில் மது என்னும் பழங்குடி இளைஞர், மிளகாய்ப் பொடி, மஞ்சள் தூளைத் திருடிவிட்டதாக ஒரு கும்பலால் தாக்கப்பட்டு, உயிரிழந்தார். கேரளா மட்டுமல்லாது தமிழகத்திலும் இந்தச் சம்பவம் அதிர்வலைகளை உண்டாக்கியது. அதற்கு ஒரு வாரம் முன்புதான், பஞ்சாப் நேஷனல் வங்கியில் நீரவ் மோடி செய்த பல்லாயிரம் கோடி மோசடி அம்பலத்துக்கு வந்தது. ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் இந்த இரு சம்பவங்களையும் ஒப்பிட்டு கருத்துப்படங்கள், கவிதைகள், ஓவியங்கள் பகிரப்பட்டன. இதில் கவனிக்க வேண்டிய விஷயம், மது மரணம் தொடர்பான படங்களை, கருத்துகளை உருவாக்கியதும் அதை அதிகமாகப் பகிர்ந்ததும் இளைஞர்கள். அம்மாதிரியான பகிர்வுகள் சிலவற்றின் தொகுப்பு இது.

மது

மது, தேடி அலையும் காட்டின் மகன்

மது என்னும் பறவைக்கு ஜாதி இல்லை

மதமும் பதாகையும் ஒன்றும் இல்லை

மரமும் பனியும்தான் மதுவின் மதம்

‘மதி’ (போதும்) எனக் கைகூப்பி

மது சொல்லவே

மரணம் மதி (போதும்) என்று

ஆள்கூட்டமும் சொல்லியது

மதம் கொண்டு ஒரு கூட்டம்

மரணம் விதிக்க

மதி(போதும்) எனச் சொல்ல

ஆருமில்லை

மஞ்சளுக்கும் மல்லிக்கும்

மனித உயிரின் விலைகொடுத்த

மனித ஜென்மங்களுக்கு ஜீவனுண்டு

மஞ்சளின், மல்லியின் வாசம் தேடி இறங்கிய

மதுவுக்கு நீதி உண்டா?

- வாஜித் வெளும்பியம்பாடம்

(தமிழில்: ஜெய்)

கடவுள்: அதிர்ச்சியாக இருக்கிறது. உனக்கு நடந்ததற்காக மன்னித்துவிடு.

மது: எனக்கு என்ன நடந்தது?

கடவுள்: அவர்கள் உன்னைக் கொன்றுவிட்டார்கள்

மது: சரி, ஆனால் எதற்காக?

கடவுள்: உனக்குப் பசி இருந்திருக்கக் கூடாது

மது: என்னை மன்னித்துவிடுங்கள்

கடவுள்: -----

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in