

கல்லூரி வாழ்க்கை என்றாலே மூன்று நான்கு ஆண்டுகள் படிப்பு, புத்தகங்கள், தேர்வுகள், நண்பர்கள் உடன் மகிழ்ச்சி தருணங்கள், பட்டமளிப்பு, வேலை பெறுதல் என்று நிற்காமல் மாணவர்கள் ஒன்றுபட்டால் பல பயனுள்ள செயல்களை செய்யலாம் என்று நம்பிக்கை தருகின்றனர் இளைஞர்கள்.
அந்த வகையில் சென்னை கிறிஸ்தவக் கல்லூரி மாணவர்கள் படிப்பு, கலை ஆகியவற்றோடு சமூக சேவையிலும் தங்கள் பங்களிப்பை அளித்துள்ளனர்.
ஸ்கிப்-எ-மீல் அமைப்பு
ஜோஸ்னா, இரண்டாம் ஆண்டு இதழியல் துறை மாணவி ஸ்கிப்-எ-மீல் என்ற அமைப்பைத் தொடங்கியுள்ளார். விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவர்கள் வாரம் ஒரு முறை வெளி உணவங்களில் சாப்பிடுவது வழக்கம். அப்படி செய்கையில் விடுதியில் தயாரிக்கப்படும் உணவுகள் வீணாகின்றன.
எனவே வாரம் ஒரு முறை சனிக்கிழமை தோறும் மதிய வேளையில் உணவுகளை வெளியில் உட்கொள்ளும்போது, மாணவர்கள் விடுதியில் தரப்படும் உணவுகளையும் பெற்றுக்கொண்டு வீணாக்காமல் சாலை ஓரம் இருக்கும் எளியவர்களுக்குத் தருகின்றனர். “வட இந்தியாவில் அர்ப்பன் ராய் என்பவர் தொடங்கியதே ஸ்கிப்-எ-மீல் அமைப்பு. அதன் தூண்டுதலாகச் சென்னையிலும் தொடங்க வேண்டும் என்று தோன்றியது. நண்பர்களின் ஒத்துழைப்பால் இந்தப் பணியை தொடர்ந்து செய்துவருகிறோம்” என்கிறார் ஜோஸ்னா.
ஜோஸ்னா, இரண்டாம் ஆண்டு இதழியல் துறை மாணவி ஸ்கிப்-எ-மீல் என்ற அமைப்பைத் தொடங்கியுள்ளார். விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவர்கள் வாரம் ஒரு முறை வெளி உணவங்களில் சாப்பிடுவது வழக்கம். அப்படி செய்கையில் விடுதியில் தயாரிக்கப்படும் உணவுகள் வீணாகின்றன.
எனவே வாரம் ஒரு முறை சனிக்கிழமை தோறும் மதிய வேளையில் உணவுகளை வெளியில் உட்கொள்ளும்போது, மாணவர்கள் விடுதியில் தரப்படும் உணவுகளையும் பெற்றுக்கொண்டு வீணாக்காமல் சாலை ஓரம் இருக்கும் எளியவர்களுக்குத் தருகின்றனர்.
“வட இந்தியாவில் அர்ப்பன் ராய் என்பவர் தொடங்கியதே ஸ்கிப்-எ-மீல் அமைப்பு. அதன் தூண்டுதலாகச் சென்னையிலும் தொடங்க வேண்டும் என்று தோன்றியது. நண்பர்களின் ஒத்துழைப்பால் இந்தப் பணியை தொடர்ந்து செய்துவருகிறோம்” என்கிறார் ஜோஸ்னா.
விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர்களால் தொடங்கப்பட்ட இந்த அமைப்பிற்கு கேம்பஸில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. தற்போது கல்லூரியில் மற்ற மாணவர்களும் தங்களால் இயன்றதை அளித்து வருகின்றனர்.
“ஒரு பொருளைப் பெற்றுக்கொள்வதைவிட, அதை அளிப்பதிலேயே மகிழ்ச்சி அதிகம் உண்டு என்பதை உணர்ந்தோம். நண்பர்களுடன் சேர்ந்து செய்வது இன்னும் தீவிரமாகச் செயல்பட தூண்டுகிறது” என்கிறார் ஸ்கிப்-எ-மீல் உறுப்பினர் தாரிணி.
சங்கமம்- கனவு மெய்ப்பட வேண்டும்
சங்கமம் குழு சார்பாக, முதலாம் ஆண்டு முதுகலை சமூகப்பணித் துறை மாணவர்கள் ஏழு நாள் கிராமப்புற முகாமின் ஒரு பகுதியாக ஜவ்வாது மலைகளில் உதவிப் பணிகளைச் செய்திருக்கின்றனர். தங்களுடைய உடல்நிலை குறித்து விழிப்புணர்வு இன்றி இருக்கும் மக்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடத்தியிருக்கின்றனர்.
“இந்த முகாமை நடத்தும் போது பல விஷயங்களை நாங்கள் கற்றுக்கொண்டோம். நிகழ்ச்சிகளை எப்படி ஒருங்கிணைப்பது, மக்கள் எந்தவித உதவிகளை எதிர்பார்க்கின்றனர், சமூக சேவைகளை எந்த வழிகளில் மக்களிடம் கொண்டு சேர்க்கலாம் எனத் தெரிந்துகொண்டோம்” என்கிறார் மோரிஸ்.
சமூக சேவை பணிகளில் மிக முக்கியமான ஒன்று சுற்றுச்சூழல் பாதுகாப்பு. மக்களுக்கு நன்மை அளிக்கும் வகையில் சங்கமம் குழுவினர் ஜவ்வாது மலை ஜமுனாமருதூர் பகுதிகளில் 45 மரக்கன்றுகளை நட்டிருக்கின்றனர்.
மரங்கள் நடப்பட்ட சுற்றுப் பகுதிகளில் தமிழக அரசு சாலைகளை அமைக்கத் திட்டமிட்டுள்ளது. மேலும் பல திட்டங்களுடன் சங்கமம் குழு தயாராகி வருகிறது.
நண்பர்களுடன் சேர்ந்து பணியாற்றும்போது ஆர்வமும் வேகமும் அதிகமாகக் காணப்படும். உதவிகள் செய்து திருப்தி அடையும் உணர்வை பெறுவதில்தான் ஆனந்தம் இருக்கிறது என்று இந்த மாணவர்கள் நன்றாகப் புரிந்துவைத்திருக்கின்றனர்.