ஒரு கோப்பை சந்தோஷம்!

ஒரு கோப்பை சந்தோஷம்!
Updated on
1 min read

எல்லா விஷயங்களிலுமே ஏதாவது புதுமையை விரும்புகிறார்கள் இந்தக் காலத்து இளைஞர்கள். அதற்கு காபி கப்புகளும் விதிவிலக்கல்ல. அந்த வகையில் காபி கப்புகளிலும் இளைஞர்களை ஈர்க்கும் புதுமையான டிசைன்கள் வந்தவண்ணம் உள்ளன. ஆன்லைனில் விதவிதமான கப்புகள் விற்பனைக்காகக் குவிந்துகிடக்கின்றன. அவற்றில் இளைஞர்களை ஈர்க்கும் கப்புகள் சில:

வெப்பத்தைப் பொறுத்து நிறம் மாறும் கப்புகளுக்கு எப்போதுமே வரவேற்பு அதிகம். இந்த வகை கப்புகள், மேற்புறப் பூச்சின் காரணமாக வெப்பநிலை மாற்றத்துக்கு ஏற்ப நிறம் மாறும். இதை ஆங்கிலத்தில் ‘ஹீட் சென்சிடிவ் மேஜிக் கப்’ என்கிறார்கள். ஜில்லான தண்ணீரோ சூடான காபியோ எதுவாக இருந்தாலும் அதன் மேஜிக்கால் கப் நிறம் மாறுவது அத்தனை அழகாக இருக்கும். இந்த வகை கப்புகள் சராசரியாக 450 ரூபாய் முதல் 600 ரூபாய் வரை விற்பனையாகின்றன.

தனக்குப் பிடித்த வாசகத்தை கப்புகளில் அச்சேற்றி, அதைப் பார்த்தபடி காபியோ தண்ணீரோ குடிப்பதுதான் இன்றைய இளைஞர்களின் ஸ்டைல். இதை போட்டோ கப் என்கிறார்கள். இந்த வகை கப்புகள் பல டிசைன்களில் கிடைக்கின்றன. வாசகங்களை அச்சிட இடமும் ஒதுக்கிவிடுகிறார்கள். வாசகத்தை அச்சிட விருப்பம் இல்லாவிட்டால் பிடித்த ஒளிப்படங்களையும் அச்சிடலாம். இந்த காபி கப் 300 ரூபாய் முதல் கிடைக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in