

ஆழ்கடலில் அமைக்கப்பட்ட உலகின் மிகப் பெரிய ஹோட்டல் என்ற சிறப்பை நார்வே ஹோட்டல் ஒன்று பெற்றுள்ளது. அந்த ஹோட்டலின் பெயர் ‘அண்டர்’. கடந்த மாதம்தான் இந்த ஹோட்டல் திறக்கப்பட்டது. ஐரோப்பாவின் முதல் ஆழ்கடல் ஹோட்டல் இதுதான்.
நார்வேயின் தென் பகுதியில் கடலில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஹோட்டலில், சாப்பிடுவதற்காக சுமார் 7 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துவிட்டு காத்துக்கொண்டிருக்கிறார்கள். குறைந்தபட்சம் 30 ஆயிரம் ரூபாயைக் கையில் வைத்திருந்தால்தான் இங்கே உணவு சாப்பிட முடியும்.