

1. ஒரு மணி நேரத்துக்கு 150 மைல்கள் என்ற வேகத்தில் ஒரு மின்ரயில் வேகமாக வடதிசையில் சென்று கொண்டிருக்கிறது. அப்போது காற்று தென்திசையில் வீசிக்கொண்டிருக்கிறது. அப்படி யானால் ரயிலில் இருந்து வரும் புகை எந்தத் திசையில் செல்லும்.
2. ஆசிரியர்: 4,657 என்ற எண்ணை 7,854-உடன் கூட்டி, பின்னர் 678-ஆல் பெருக்கி, கடைசியில் 62-ஆல் வகுத்தால் என்ன வரும்?
ஜெஸ்ஸி: ?
3. நீங்கள் ஓர் அறையில் இருப்பதாகக் கற்பனை செய்யுங்கள். அந்த அறைக்குக் கதவுகளும் கிடையாது, ஜன்னலும் கிடையாது. பின்பு அந்த அறையிலிருந்து எப்படித் தப்பிப்பீர்கள்?
4. நீங்கள் ஓர் ஓட்டப் பந்தயத்தில் ஓடிக் கொண்டிருக்கிறீர்கள். இரண்டாவது நிலையில் ஓடிக்கொண்டிருக்கும் நபரை நீங்கள் ஓவர்டேக் செய்தால், எந்த நிலையில் இருப்பீர்கள்?
5. ஒரு காதலன் தன்னுடைய உண்மையான காதலை காதலிக்கு நிரூபிக்க, எவரெஸ்ட் மலை உச்சிக்கு ஏறினான். இந்தியப் பெருங்கடலை நீந்திக் கடந்தான், சகாரா பாலைவனத்தில் நடந்தான். அதன் பிறகு அவன் காதலி என்ன செய்திருப்பாள்?
பதில்கள்:
1. மின்ரயிலுக்கு ஏது புகை?
2. தலைவலி வரும்
3. கற்பனை செய்வதை நிறுத்திவிடுங்கள்.
4. இரண்டாவது
5. என் அருகில் இருக்க வேண்டிய நேரத்தில், நீ ஏதேதோ செய்து கொண்டிருந்தாய் என்று கூறி லவ்வை பிரேக் அப் செய்திருப்பாள்.