

வின்ட்டர் வேர், சம்மர் வேர் என்று சீசன் ஆடைகளை அணிந்து மாடல்கள் ரேம்ப் வாக் வரும் ஃபேஷன் ஷோக்களுக்கு மத்தியில், முழுக்க பிரைடல் வேர் டிரெஸிங்கில் அணிவகுத்து நிற்பதும் ரசனைதான்.
இப்படி ஒரு ஷோ ‘எஸென்ஷுவல்’ சார்பில் சென்னையில் சமீபத்தில் நடந்தது. ‘‘புதுமையான ஹேர் ஸ்டைல், பாரம்பரிய ஆடை என்று ஒரு வித்தியாசமான ஃபேஷன் ஷோவில் கலந்துகொண்ட திருப்தியைக் கொடுக்கிறது. இந்த ஷோ- மாடல்கள் மனதை விட்டு அகலாமலேயே நிற்கிறார்கள்” என்று கூறிப் பூரிக்கிறார், நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஷோ ஸ்டாப்பர் தன்ஷிகா.