

கோவாவில் ராக் இசை ரசிகர்களுக்கு ‘சன்பர்ன்’ இசைத் திருவிழா உள்ளது. நாசிக்கில் ‘சுலாபெஸ்ட்’ கொண்டாடப்படுகிறது. புனே நகருக்கென்று என்எச்7 இருக்கிறது. சென்னையில் அப்படிப்பட்ட மிகப்பெரிய திருவிழாக்கள் இல்லாத குறையைப் போக்கப் போகிறது கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள சேரியட் பீச் ரிசார்ட்டில் நடக்கும் ‘தி ராக் ஸ்டாக்’ திருவிழா.
செப்டம்பர் 6-ம் தேதி நடக்க இருக்கும் இதை க்ளவுட் 9 என்டர்டெய்ன்மெண்ட் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஒருங்கிணைக்கின்றனர். இந்தத் திருவிழாவில் ஏழு குழுக்கள் பங்கேற்க உள்ளன. சிக்கிமைச் சேர்ந்த கிரிஸ் அண்ட் தி க்ரானிக்கிள்ஸ், கேரளாவைச் சேர்ந்த அவியல், சென்னையின் ஜங்க் யார்ட் க்ரூவ் உள்ளிட்ட இசைக் குழுக்கள் கலந்துகொள்கின்றனர்.
நேரடி ராக் இசை நிகழ்ச்சிகளில் அதிக ஆர்வம் காட்டாதவராக நீங்கள் இருந்தால், வாட்டர் ஸ்போர்ட்ஸ், கேம்ஸ் ஸ்டால்கள் மற்றும் பேஷன் ஷோ நிகழ்ச்சிகளில் பங்கேற்கலாம்.
இடம்: சேரியட் பீச் ரிசார்ட், சென்னை
நாள்: செப்டம்பர் 6, நேரம்: மதியம்: 12.00 மணி தொடங்கி
நுழைவுக்கட்டணம்: 1000 ரூபாய், மாணவர்களுக்கு 500 ரூபாய்
தொடர்புக்கு: 044-28282000, 9092920000, 9952399900