

லண்டனைச் சேர்ந்த 30 வயதான மேக்கப் கலை நிபுணர் லோரா ஜென்கின் மேக்கப்பில் ஒரு புதுமை விரும்பி. மேக்கப்பில் எவ்வளவு ஆர்வமோ அதே அளவுக்கு கார்ட்டூன் கேரக்டர்கள் மீதும் அவருக்கு அதீத ஆர்வம். இந்த இரண்டையும் ஒன்றாக்கி புதுமையை உண்டாக நினைத்தார். அந்தச் சிந்தனையில் உதித்ததுதான் ‘கார்ட்டூன் லிப் ஆர்ட்’.
உதடுகளில் கலர்கலராக லிப்ஸ்டிக்கைப் பூசும் பெண்களுக்கு மத்தியில், உதட்டில் அழகான கார்ட்டூன்களை வரைந்து அசத்திவருகிறார் இவர். மிக்கி மவுஸ், அலாவுதீன், ப்ளூடோ என இவருடைய உதட்டில் உருவான கார்ட்டூன்கள் ஏராளம். உதட்டில் அவர் வரைந்த கார்ட்டூன்களையும் அதை உதட்டில் வரைவதையும், யூடியூபிலும் இன்ஸ்டாகிராமிலும் பகிர்ந்துவருகிறார். இவரது
லிப் ஆர்ட் இன்று உலக அளவில் பிரபலமாகிவிட்டது. சமூக ஊடகங்களில் இவருடைய வீடியோக்கள் லைக்குகளை அள்ளுகின்றன.