

மதுவால் அழிந்த குடும்பங்கள், சிதைந்த கனவுகள், நடந்த அவலங்கள் இவை அனைத்தையும் அடித்தளமாகக் கொண்டு இயக்கப்பட்டுள்ள குறும்படம் ‘மானிடர்’.
கிராமப்புறத்தில் உள்ள சாதாரணக் கூலி வேலை செய்து பிழைக்கும் குடும்பம் ஒன்று. அதில் கணவனின் மது அருந்தும் பழக்கம், மனைவிக்கும், குழந்தைகளுக்கும் துயரங்களையும், இன்னல்களையும் தருகிறது. இதைக் கதையாகச் சித்திரித்திருக்கும் இந்தப் படம் சமூகத்தின் ‘குடி’மகன்களுக்கு ஒரு சாட்டையடி.
அன்றாட வாழ்க்கையில் பல சூழல்களில் ‘குடி குடியைக் கெடுக்கும்’ என்றும், ‘உடல்நலத்திற்குத் தீங்கு விளைவிக்கும்’ என்பதைப் பார்க்கிறோம், இருந்தும் இதை ஒரு பொருட்டாக மதிக்காமல் மதுவை நாடுபவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். சமூகத்தில் விபத்து, கொலை, பாலியல் வல்லுறவு என நாள் முழுவதும் மதுவால் ஏற்படும் குற்றங்களை அதிகரித்து வருவதைக் குறைக்கவும், இத்தகைய தற்கொலைப் பாதையை நோக்கிச் செல்லும் மக்களைத் தடுக்கவும் மானுடா நீ என்ன செய்யப்போகிறாய்? என்ற கேள்வியை எழுப்புகிறார் இக்குறும்படத்தின் இயக்குநர் அபு.
அபு