இளைஞர்களின் ஃபேஷன் கடுக்கன்கள்!

இளைஞர்களின் ஃபேஷன் கடுக்கன்கள்!
Updated on
1 min read

நம்மூர் இளைஞர்கள் கடுக்கன் போட்டுக்கொள்வது புதிய விஷயமல்ல. இது பழைய ஃபேஷன்தான். ஆனால், காலத்துக்கு ஏற்ப கடுக்கன் தோற்றம் மாறுவதே இங்கு ஃபேஷன். அந்த வகையில் செல்லப் பிராணிகளின் உருவத்தால் ஆன கடுக்கன்கள்தாம் இந்தக் கால இளைஞர்களின் ஃபேஷன்.

நாய், பூனை, தவளை, டால்பின், குதிரை, ஆமை, பல்லி, யானை, சிலந்தி, உயிரினங்களின் கடுக்கன்களும் கம்மல்களும் தற்போது சந்தையில் புழக்கத்தில் உள்ளன. வெளிநாடுகளில் மட்டுமே கிடைத்த இந்த வகையான கம்மல்கள் தற்போது இந்தியாவிலும் ஜோராக விற்பனையாகின்றன. ஆன்லைனில் தட்டினால் விதவிதமான கம்மல்களும் கடுக்கன்களும் கொட்டுகின்றன.

புதுவிதமான கம்மல்களை இளம் பெண்கள் மட்டுமல்ல, இளைஞர்களும் மாட்டிக்கொள்கிறார்கள். விலங்குகளிடம் அன்பு கொண்டவர்கள் இந்தக் கம்மல்களை அதிகம் வாங்குவதாக ஆன்லைன் தகவல்கள் சொல்கின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in