

மனதுக்கு நெருக்கமான வர்களுக்குப் பிறந்தநாளோ திருமணநாளோ வந்தால், என்ன பரிசு குடுக்கலாம் என்று யோசிப்பவர்கள் ஏராளம். சிறந்த பரிசைக் கொடுப்பது அவ்வுளவு எளிதான காரியம் அல்ல. தாங்கள் நேசிக்கும் ஒருவருக்கு மறக்க முடியாத பொருட்களைக் கொடுப்பதில் அளவற்ற மகிழ்ச்சி கொடுப்பவருக்கு ஏற்படும். எனவே, அதற்காக ரொம்பவே மெனக்கெடுவார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு ‘மாட்போட்ஜ்’ (modpodge) என்ற பசை, பரிசைத் தாமாகவே செய்து கொடுக்க வாய்ப்பு அளிக்கிறது.
இந்தப் பசையை வைத்து மரப் பலகையில் செய்யக்கூடிய ஒளிப்பட பிரேம்கள் இது. இதை செய்வது மிகச் சுலபம். இதைச் செய்வதற்கு ஒரு மரப் பலகை, இன்க்ஜெட் பிரின்ட்ரில் பிரிண்ட் செய்யப்பட்ட ஒளிப்படம், மாட்பாட்ஜ் பசை, ஈரத்துணி, வார்னிஷ் இருந்தால் போதும். அழகான மர அட்டையிலான ஒளிப்பட பிரேமை செய்துவிடலாம்.
முதன்முதலில் அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில்தான் இந்த முறை பிரபலமானது. இப்போது இந்தியாவுக்கும் இது வந்துவிட்டது. வித்தியாசமாக, மறக்க முடியாத நினைவுப் பரிசைத் தன் கையாலேயே செய்து கொடுக்க விரும்புவர்களுக்கு இது சிறந்த தேர்வு.
கடையில் பரிசுப் பொருள் வாங்குவதைவிட இதை நாமாகவே செய்யும்போது விலையும் குறையும்; நாமே செய்த திருப்தியும் ஏற்படும், பரிசு பெறுவோரின் மனதை கவர்ந்த மாதிரியும் இருக்கும்.
ஒளிப்பட பிரேம் செய்ய: https://youtu.be/0MPS_MA-qIY
- மு. கிருத்திகா