

வெளிநாடுகளில் செங்குத்து நடனம் (vertical dance) மிகப் பிரபலம். இந்த நடனத்தில் இத்தாலியக் கலைஞர்கள் புகழ்பெற்றவர்கள். உயரமான சுவரின் உச்சியில் கட்டப்பட்டிருக்கும் கயிறின் துணையோடு அந்தரத்தில் நடனமாடும் இந்தச் செங்குத்து நடனத்தை பல நாடுகளிலும் இவர்கள் நடத்தியிருக்கிறார்கள்.
சில தினங்களுக்கு முன்பு ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள செயின்ட் ஜார்ஜ் சதுக்கத்தில் இரவு வேளையில் செங்குத்து நடனத்தை அரங்கேற்றி, பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தார்கள் இக்கலைஞர்கள்.