

வட கிழக்கு மாநிலமான மணிப்பூரின் தனிச்சிறப்பான திருவிழா சங்காய் திருவிழா. அந்த மாநிலத்தில் மட்டுமே காணப்படும் சங்காய் (நாலு கொம்பு) மான் இனத்தின் பெயரிலேயே இந்தத் திருவிழா 2010-ம் ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.
மாநிலச் சுற்றுலா வளர்ச்சியை நோக்கமாகக்கொண்டு, மாநிலத்தின் பண்பாடு பாரம்பரியத்தின் பெருமைகளையும் கைவினைப் பொருட்களின் சிறப்புகளையும் வெளிப்படுத்தும் வகையில் இந்தத் திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு நவம்பர் 21 முதல் நவம்பர் 30 வரை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.