

‘சுதந்திரம் என்பது பிடித்ததைச் செய்வது மட்டுமல்ல, பிடிக்காததைச் செய்யாமல் இருப்பதும்தான்’ என்று ஒரு மேடைப் பேச்சில் பிரபல பேச்சாளர் பர்வீன் சுல்தானா கூறியிருந்தார். அது, எவ்வளவு நிதர்சனமான உண்மை! யாரோ ஒருவர் எங்கோ பேசிவிட்டுச் செல்வது நம்மிடம் எப்படிப்பட்ட தாக்கத்தை உருவாக்குகிறது?
“இவ்வளவு புத்தகங்கள் படிக் கிறீங்களே, அது உங்க வாழ்க்கைல ஏதாவது தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கா?” என்று கேட்பவர்களிடம், ஒரு சில வார்த்தைகள்கூட வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும்போது, புத்தங்கள் ஏற்படுத்தாதா என்பதுதான் என் பதில் கேள்வி. ஆனாலும், நாம் செய்யும் ஒவ்வொரு காரியத்திலிருந்தும் என்ன பயன் கிடைக்கும் என்பதை எதிர்பார்ப்பது நம் இயல்பாகவே மாறிவிட்டது.