

எங்காவது இழவு வீட்டில் சிரிப்புச் சத்தத்தைக் கேட்டது உண்டா? இப்படித் தொடக்கத்திலேயே 'இழவு' என்கிற வார்த்தையைப் பயன்படுத்துவது சற்று உறுத்தலாகத்தான் இருக்கிறது.
ஆனால், 'இழவு' என்கிற வார்த்தையை இங்கு நீக்கினாலும் வாழ்க்கையின் அழையா விருந்தாளியாக அது இருக்கும், அதை அகற்ற இயலாது என்பதே நிதர்சனம். இழவும் இழவு வீடும் அப்படியொன்றும் மோசமானதில்லை. அங்கேயும் எல்லா உணர்வுகளும் இருக்கத்தான் செய்கின்றன. பிறப்பு நிகழ்ந்த வீட்டில் சிரிக்கத்தான் வேண்டும். இழவு வீட்டில் அழத்தான் வேண்டும் என்பதெல்லாம் எதிர்பார்ப்பாக இருந்தாலும், உண்மை முற்றிலும் வேறு.