

இன்று காதலிப்பதாக இருந்தாலும் சரி, காதலை பிரேக் அப் செய்வதாக இருந்தாலும் சரி, எல்லாவற்றையும் சமூக ஊடங்களில்தான் அறிவிக்கிறார்கள். ஆனால், ஒரு காலத்தில் காதலிப்பதை, காதலர்கள் ரகசியமாகவே வைத்திருப்பார்கள். ஆனால், கால மாற்றத்தால் சமூக ஊடகங்களில் காதலைப் பற்றி பிரகடனப்படுத்த வேண்டிய தேவையற்ற கட்டாயம் உருவாகியிருக்கிறது.
பொதுவாகப் படித்த பள்ளி, கல்லூரி, வேலை செய்யும் நிறுவனம்போல ‘ரிலேஷன்ஷிப் ஸ்டேட்ட’ஸும் ஒரு பகுதியாக ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் வைக்கப்பட்டிருக்கிறது. பள்ளி, கல்லூரி, வேலை செய்யும் நிறுவனம் பற்றி சமூக ஊடங்களில் குறிப்பிடுவது பிரச்சினையை ஏற்படுத்தப் போவதில்லை. ஆனால், நட்பு வட்டம், உறவினர்கள் எனத் தங்கள் சுற்றத்தாரிடம் காதலிக்கும் தகவலை வெளிப்படுத்துவதற்கான ஒரு களமாகச் சமூக ஊடகங்கள் மாறியிருக்கின்றன. அது சரியா தவறா என்கிற விவாதங்கள் ஒரு பக்கம் ஓடிக்கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், சமூக ஊடகங்களில் காதலை வெளிப்படுத்தும் முன்பு சில விஷயங்களை காதலர்கள் கணக்கில் கொள்ள வேண்டும்.