

‘சிண்ட்ரெல்லா மாதிரி டிரஸ் வேணும்னு கேட்டா, புள்ளத்தாச்சி மாதிரி டிரஸ் வாங்கிக் கொடுத்திருக்கீங்க?’ என்று கதறினாள் ஆனந்தி. ‘பிரின்சஸ் டயானா மாதிரி ஹேர்கட் கேட்டேன், பையன் மாதிரி ஹேர்கட் பண்ணிவிட்டுட்டீங்க’ என்று மறுபடியும் ஏமாற்றமும் கதறலும். இவையெல்லாம் நடந்து ஆண்டுகள் உருண்டோடிவிட்டன.
ஒவ்வோர் ஆண்டும் பிறந்தநாள் வரும்போது, எதிர்பார்ப்பும் ஏமாற்றங்களும் சேர்ந்துவருவது என் வாழ்வில் வழக்கம்.
உடை, ஹேர்ஸ்டைல், உணவு என்று எல்லாவற்றிலும் எனக்கு எதிர்பார்ப்புகள் ஏராளம்.