

விவாத மேடைகளில் பங்கேற்றதைவிடக் குளியலறையிலோ அல்லது தனிமையிலோ நமக்கு நாமே பேசிக்கொள்ளும் உள்மனசு விவாதங்களே அதிகம். ஒரு பட்டிமன்றத்துக்குத் தயாராகிக்கொண்டிருந்தபோது, பட்டிமன்றப் பேச்சாளரான ராஜா கூறியது என் நினைவுக்கு வந்தது, ‘எவ்வளவு பயிற்சி செய்தாலும், மேடையிலிருந்து இறங்கிய பின்பு, இப்படிப் பேசியிருக்கலாமோ, அதைச் சொல்லியிருக்கலாமோ என்கிற எண்ணங்களைத் தவிர்க்க முடியாது. இவ்வளவு ஆண்டுகள் ஆகியும் பட்டிமன்ற நிகழ்ச்சியில் தோன்றிய அனைத்தையும் பேசிவிட்டோம் என்கிற திருப்தி வரவில்லை’ என்றார்.
நாம் எப்படி இருக்கிறோம்? - விவாத மேடைகளில் மட்டுமல்ல, விவாதங்களுக்கே உண்டான ‘சைடு எஃபெக்ட்’ அது. மனதில் நடைபெறும் விவாதங்களில் பெரும்பாலும் நாமே வெற்றி பெறுகிறோம்.