

“அடுத்த சைஸ் கொடுன்னு எத்தனை தடவ கேட்குறது? மறுபடியும் இதையே காட்டிட்டு இருக்கியே..” - துணிக் கடையில் பாட்டி புலம்பினார். பாட்டியின் புலம்பல் நியாயம்தான். ஆனால், சீன மொழி பேசும் கடைக்காரரிடம் சுத்தத் தமிழில் புலம்பி என்ன பிரயோஜனம்? வணிகத்தில் மட்டுமா மொழி முக்கியம், காதலிலும்தான். இருவரும் வேறு மொழி பேசுவதில் தவறில்லை.
ஆனால், அதில் புரிதல் இல்லையெனில் உரையாடல் சுவைக்காதே. உரையாடல் மூலமே உருவாகும் உறவும் வாழ்க்கையும் எப்படிச் சுவைக்கும்? நானும் பாட்டியும் முதல் வெளிநாட்டுப் பயணமாக மலேசியா சென்றோம். என் அக்கா மகள் மீதுள்ள பேரன்பினால், அவளுக்கு ஓர் உடை வாங்கப் பாட்டி போராடிக் கொண்டிருந்தார்.