

உப்பின்றி உணவு ருசிக்காது. ஆனால், உப்பு அளவுக்கு மீறினால், உணவை வாயில் வைக்கவே முடியாது. அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு என்பது போல், அளவுக்கு மீறிய அன்பும் அரவணைப்பும்கூட வாழ்க்கையின் ருசியைக் கெடுக்கக்கூடும்.
பாசத்தின் அளவைத் தீர்மானிப்பது எப்படி? போதும் என்று கூறுவது எப்படி? உணவை மிச்சம் வைத்தால், உணவின்றித் தவிப்பவர்களைப் பற்றிப் பேசி, உணவு கிடைத்ததற்கு நன்றியைத் தெரிவிக்கும் விதமாக வயிற்றை நிரப்பச் சொல்லும் பெற்றோர் உண்டு.