

கோடை விடுமுறையில் சென்னை, மதுரை, திருநெல்வேலியில் வெயில் அதிகமாக இருக்கும் என்று ஊட்டி, கொடைக்கானல், ஏலகிரி என்று குளிர்ப் பிரதேசம் போகும் மக்களுக்கு மத்தியில், எதிர்நீச்சல் போட்டு ஒவ்வோர் ஆண்டும் கோவையிலிருந்து மதுரை, திருநெல்வேலி என்று வெயிலை தேடிச் செல்லும் குடும்பம்தான் எங்களுடைய குடும்பம்.
காரணம், என் அத்தை மதுரையிலும், பெரியப்பா திருநெல்வேலியிலும் குடும்பத்துடன் இருந்தனர். மதுரையில் அத்தை வீட்டில் ஒரு மாதம், திருநெல்வேலியில் பெரியப்பா வீட்டில் ஒரு மாதம் என்று இரண்டு மாதங்களில் மதுரை வட்டார மொழியும், நெல்லை வட்டார மொழியும், கோடை விடுமுறை முடிந்து பள்ளி செல்லும்போதும் சில வாரங்கள் வரை என்னோடு பயணிப்பது வழக்கம்.