

நம் வாழ்க்கையில் விலை உயர்ந்த பொருள்கள் ஏராளம் இருக்கின்றன. அவற்றை ஆசை தீர வாங்கியும் அவ்வப்போது நமக்குள் அதிருப்தி வருவது ஏன்? யாராக இருந்தாலும், வாழ்க்கையின் சீக்ரெட் ரெசிபியில் ‘புரிதல்’ என்கிற மூலப் பொருள் இருந்தே ஆக வேண்டும். இல்லையெனில் வாழ்க்கை இருக்கும், ஆனால் அதில் சுவை இருக்காது!
அண்மையில் இந்தோனேசியாவின் பாலி தீவுக்கு நண்பர்களோடு சென்றிருந்தேன். அங்கு இறங்கியதிலிருந்து வெளியேறும்வரை எங்களுக்கென்று ஓர் ஓட்டுநரை நியமித்திருந்தார்கள். பாலி வந்தாலே அங்கே வந்ததற்கு ஆதாரமாக ஒளிப்படம் எடுக்க பாலி ஸ்விங், கேட்ஸ் ஆப் ஹெவன் எனச் சில இடங்கள் உண்டு.