

பன்னிண்டு ஆண்டுகளுக்கு முன்பு உருவான ஒரு திரைப்படம், அத்தனை ஆண்டுகளாகத் தள்ளிச் சென்று, இப்போது ரிலீஸ் ஆகவிருக்கிறது எனும் செய்தியைத் தமிழ்ச் சமூகம் கொண்டாடும் விதம் யாருமே எதிர்பாராதது. ஏனெனில், இதே படத்தின் டிரைலர் 12 ஆண்டுகளுக்கு முன்பு வெளியானபோது அன்றைய 90'ஸ் கிட்ஸுக்குப் பெரிதாக நம்பிக்கை ஒன்றும் இல்லை.
ஆனால், இன்று இந்த 2கே கிட்ஸோ `சந்திரமுகி'யில் காசுமாலை, ஒட்டியாணத்தை ஜோதிகா எடுத்துக்காட்டுவதுபோல விஜய் ஆண்டனி வைப், சந்தானம் காமெடி, சுந்தர் சி டிரேட்மார்க், விஷால் ஆக்ஷன் என அவ்வளவு ஆர்வமாகிவிட்டார்கள். `மை டியர் லவ்வரு' பாட்டு நல்லாதான இருக்கு என ரிப்பீட் மோடில் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.