Last Updated : 04 Oct, 2024 06:17 AM

 

Published : 04 Oct 2024 06:17 AM
Last Updated : 04 Oct 2024 06:17 AM

ப்ரீமியம்
இந்தியாவின் பணக்கார யூடியூபர்கள்!

யூடியூப் அலைவரிசைத் தொடங்கும் எல்லோராலும் வருவாய் ஈட்ட முடிவதில்லை. ஏனெனில், முதலில் யூடியூப் வழியாகப் பார்வையாளர்களை ஈர்க்க வேண்டும். அதற்கு நல்ல, புதுமையான, வித்தியாசமான உள்ளடக்கங்களும் தேவை; கடுமையான உழைப்பும் தேவை. இதில் சமரசம் செய்துகொள்ளாமல் உழைப்பவர்களே வருவாய் ஈட்டுகிறார்கள். அந்த வகையில் இந்தியாவில் 2024 நிலவரப்படி மிகவும் பணக்கார யூடியூபர்களாக வலம்வருபவர்கள் யார் எனப் பார்ப்போம்.

கௌரவ் செளத்ரி (டெக்னிக்கல் குருஜி): ராஜஸ்தானின் அஜ்மீரைச் சேர்ந்த 33 வயதான கவுரவ் செளத்ரி, தொழில்நுட்பம் சார்ந்த யூடியூப் அலைவரிசையை வைத்திருக்கிறார். 2015இல் தொடங்கப்பட்ட இந்த அலைவரிசையில், தொடக்கத்தில் தொழில்நுட்ப விமர்சனங்கள், பயிற்சிகளை அவர் வழங்கிவந்தார். இதனால், பார்வையாளர்கள் எண்ணிக்கை கூடியது. இந்தியாவில் 2018இலேயே 1 கோடி சந்தாதாரர்களைக் கொண்ட முதல் தொழில்நுட்ப அலைவரிசையாக ‘டெக்னிக்கல் குருஜி’ மாறியது. தற்போது 2.36 கோடி சந்தாதாரர்கள் உள்ளனர். தோராயமாக இவருடைய சொத்து மதிப்பு ரூ.356 கோடியாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x