

அ
ந்த இடம் முழுவதும் செராமிக் எனப்படும் வெண் களிமண்னால் உருவாக்கப்பட்ட உருவங்கள், பூந்தொட்டிகள், பூஞ்சாடிகள், பெயர்ப் பலகைகளால் நிறைந்துகிடக்கிறது. பிஎஸ்ஜி காலேஜ் ஆஃப் டெக்னாலஜியில் ஃபேஷன் டிசைன் இன் மெர்சண்டைஸிங் பிரிவில் முதுநிலை மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவிகளின் கைவண்ணத்தில் உருவான கலைப் பொருட்கள்தான் இவை.
சென்னை தக்ஷிணசித்ராவில் அண்மையில் நடைபெற்ற ‘செராமிக் (Ceramic) பயிலரங்கில் பங்கேற்ற இந்த மாணவிகள், பயிற்சிக்குப் பிறகு பெற்று இவற்றை உருவாக்கியிருக்கிறார்கள்.
இந்தப் பயிலரங்கில் கலந்துகொண்ட ஒன்பது மாணவிகளுக்கு ஓவியரும் செராமிக் கலைஞருமான சு. பொற்றரசன் பயிற்சி அளித்திருக்கிறார். மாணவிகள் உருவாக்கிய செராமிக் பொருட்கள் இங்கே அணிவகுத்திருக்கின்றன.