

வி
டுமுறை காலம் இது. வீட்டிலேயே பொழுதைக் கழித்தால் பெருங்குற்றமாகிவிடும். எனவே, விடுமுறை நாட்களில் புதிய இடங்களுக்குச் செல்ல நிறையவே திட்டமிடுவோம். சுற்றுலாத் தலங்களுக்குச் செல்லும்போது அங்கே தங்கவும் நேரிடும். அங்கே சரியான ஹோட்டல்களைத் தேர்ந்தெடுக்க வேண்டிய தேவையும் எழும். இதைப் பூர்த்தி செய்ய உதவிவருகிறது ‘ட்ரைவேகோ’ என்னும் இணையதளம்.
சிறந்த ஹோட்டல்கள் பற்றியும் வெவ்வேறு இணையதளங்களில் உள்ள ஹோட்டல் அறைகள், அதற்கான கட்டணங்கள் ஆகியவற்றையும் ஒருங்கே தருகிறது இந்த இணையதளம். இந்த இணையதளத்துக்குச் சென்று, நீங்கள் செல்ல விரும்பும் நகரின் பெயரை டைப் செய்தால் போதும், ஹோட்டல்கள் பற்றிய தகவல்கள் கொட்டுகின்றன.
உலகெங்கும் உள்ள ஹோட்டல்கள் பற்றிய விவரங்களை இங்கே பார்க்கலாம். அதுமட்டுமல்ல, ஹோட்டல் அறையில் தங்குவதற்கான விலைப் பட்டியலும் அந்த நகரில் உள்ள வெவ்வேறு ஓட்டல்களின் விலைப் பட்டியலோடுகூடிய ஒப்பீடும் இந்த இணைய தளத்தில் கிடைக்கிறது.
இந்தியாவில் உள்ள ஹோட்டல்கள் பற்றியும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய அளவில் சுற்றுலா செல்ல விரும்புபவர்களுக்கு இது உதவும். சுற்றுலா செல்ல விரும்புபவர்கள், இந்த இணையத்துக்கு ஒரு முறை சென்று பார்த்தால், தங்கும் இடம் பற்றி ஒரு தீர்மானத்துக்கு வந்துவிடலாம்.
மேலும் விவரங்களுக்கு: https://bit.ly/2rJ2h7z