

ஒரே உடையில் உங்கள் ஒளிப் படத்தைப் பார்த்து அலுத்துப் போய் விட்டதா? வெவ்வேறு வண்ண உடையுடன் உங்களைக் காண ஆசையா? அப்படியெனில், உங்கள் கையில் இருக்கும் திறன்பேசியே போதும். பல வண்ணங்களில் உங்கள் உடையின் நிறத்தை மாற்றும் அட்டகாசமான செயலி ‘கூகுள் பிளே ஸ்டோ’ரில் இருக்கிறது.
‘Color Changing Camera’ என்கிற செயலியைப் பதிவிறக்கம் செய்தால் போதும். அந்தச் செயலியின் மூலம் ஒளிப்படங்கள் மட்டுமல்ல காணொளிகளையும் எடுக்கலாம். அந்தச் செயலியே ஒளிப்படம் அல்லது காணொளியில் உள்ள நபரின் உடையைப் பல வண்ணங்களில் மாற்றிவிடுகிறது. உதாரணத்துக்கு ‘90ஸ் கிட்ஸ்’களின் விருப்பப் பாடல் ‘மிஸ்டர் ரோமியோ’ படத்தில் வரும் ‘மெல்லிசையே...’ இந்தப் பாடலில் ஷில்பா ஷெட்டியின் உடை பல வண்ணங்களில் மாறிக்கொண்டே இருக்கும். ‘டேய், எப்புட்றா...’ என்று அன்று வாயைப் பிளந்தவர்கள், இந்தச் செயலியின் மூலம் உங்கள் உடையின் நிறத்தையும் மாற்றி மாற்றிப் பார்த்துப் பெருமூச்சு விடலாம்.
- சுரேஷ். ஜி