

எதையுமே திட்டமிட்டுத் தெளிவாகச் செய்யும் கல்லூரி மாணவரா நீங்கள்? அப்படியென்றால் உங்களுக்கு உதவுவதற்காகவே ஒரு ஆப்ஸ் வந்திருக்கிறது.
பங்க் மேட் என்னும் இந்த ஆண்ட்ராய்ட் ஆப்ஸின் உதவியோடு இனிமேல் நீங்கள் காலேஜில் லீவ் எடுக்க வேண்டியிருந்தால்கூட அதையும் திட்டமிட்டு லீவ் எடுக்கலாம். உங்கள் கல்லூரியில் உங்களது தற்போதைய வருகை சதவிகிதம் (attendance) எவ்வளவு? நீங்கள் எத்தனை நாள் லீவ் எடுத்துள்ளீர்கள்? நீங்கள் இன்னும் எத்தனை நாள் லீவ் எடுக்கலாம், எத்தனை நாள் வகுப்புக்கு வந்தால் அட்டென்டன்ஸ் எவ்வளவு இருக்கும்? என அனைத்துத் தகவல்களையும் இந்த பங்க் மேட் ஆப்ஸ் உங்களுக்கு வழங்கும்.
ஒருவேளை கவனிக்காமல் அதிகம் லீவ் எடுத்து வீட்டீர்கள் என்றால் அதற்கான அலாரம் மணியோ ரிமைன்டர் மெசெஜோ உங்களது மொபைலுக்கு வரும். பங்க் மேட்டின் உதவியோடு இனி ஜாலியா லீவ் எடுக்கலாம்.