Last Updated : 15 Aug, 2014 10:00 AM

 

Published : 15 Aug 2014 10:00 AM
Last Updated : 15 Aug 2014 10:00 AM

மழையில் மிளிரலாம்!

மழைக்காலம் ஆரம்பித்து நனையத் தொடங்கிவிட்டோம். மழைக்காலத்தில் பேஷனபிளாக இருப்பதற்கு எந்தத் தடையும் இல்லை. அதற்காக மெனக்கெட வேண்டிய அவசியமும் இல்லை. மழைக்காலத்தில் பேஷன் ஃபீரிக்காக இருப்பதற்கு ஒரு சில ட்ரிக்குகளைக் கடைபிடித்தாலே போதுமானது. இந்த சீசனில் ஈரப்பதம், வியர்வை இரண்டையும் சமாளிக்கும் விதத்தில் நம் ஆடைகளைத் தேர்ந்தெடுத்தாலே போதுமானது. அதற்கான ஆலோசனைகளை பேஷன் டிசைனர் வெங்கடேசன் சொல்கிறார்.

மாணவர்களுக்கு..

மழைக்காலத்தில் டைட் பிட்டிங் ‘டெனிம்’களைத் தவிர்ப்பது நல்லது. மழையில் நனைந்துவிட்டால் அவை சங்கடத்தை ஏற்படுத்தும். நீங்கள் அணியும் ஜீன்ஸின் நிறம் முக்கியம். உங்களுக்கு ‘லைட் ப்ளு ஜீன்ஸ்’ பிடித்ததாக இருக்கலாம். ஆனால், அது மழைக்கு கட்டாயம் ஒத்துவராது.

அடர்த்தியான நிறங்களில் தளர்வான டிரவுசர்கள், ஜிப்அப் டிஷர்ட்கள் அணிவது நல்லது. மழையில் நனைய வேண்டிய நேரங்களில் ‘லைட் ஃபேப்ரிக்’ஆடைகளைத் தேர்ந்தெடுத்து அணியுங்கள். ஸ்லீவ்லெஸ் ஷர்ட்களைக் கூடுமானவரை தவிர்ப்பது நல்லது. ‘வின்ட் சீட்டர்’ நைலான், பாலியஸ்டர் ஆடைகள் மழைக்கு ஏற்றவை. லெதர் மற்றும் துணிப் பைகளைத் தவிர்ப்பது நல்லது. உங்கள் கல்லூரி அனுமதி அளித்தால், ஸ்மார்ட் 3/4 டிரவுசர்கள் அணியலாம்.

மாணவிகளுக்கு...

பளிச் மற்றும் அடர் நிற ஆடைகளை அணிவதற்கு இதுதான் ஏற்ற காலம். வானிலை டல்லாக இருக்கும்போது நாமும் டல்லாக டிரஸ் அணிவதைத் தவிர்க்கலாம். எளிமையான ஷர்ட்களும் குர்திகளும் இந்த சீசனுக்கு ஏற்றவை. லைகரா மற்றும் பாலியஸ்டர் கலவையில் இருக்கும் ஆடைகள் மான்சூனுக்கு ஏற்றவை.

லைட் மற்றும் பேஸ்டல் கலர் ஆடைகளைக் கூடுமானவரைத் தவிர்த்துவிடுங்கள். ஸ்மார்ட் 3/4 ஸ்கர்ட்ஸ் இந்த சீசனின் பெஸ்ட் சாய்ஸ். சல்வாரையும், பட்டியாலாவையும் தவிர்ப்பது நல்லது. நீள துப்பாட்டாவுக்குப் பதில் காட்டன் ஸ்கார்ஃப் பயன்படுத்துங்கள். ஷார்ட் குர்தாக்களுடன் அடர் நிற லெகிங்கிங்ஸ் நல்ல சாய்ஸ்.

குறைவான நகைகளை அணிவது நல்லது. பிளாஸ்ட்டிக் நெக்லெஸ் மற்றும் இயரிங்கள் இந்த சீசனுக்கு உகந்தவை. நல்ல கிரிப்புடன் இருக்கும் ‘ஸ்டர்டி ஃபுட்வியர்’ வழுக்காமல் நடப்பதற்கு உதவும். கூந்தலைப் பொறுத்தவரை ‘டைட்’ ஹேர் ஸ்டைல்களைத் தவிர்ப்பது நல்லது. ‘லூஸ் ஹேர்’தான் இந்த மான்சூன் டிரண்ட்.

மழைக்காலத்திற்கு மிதமான மேக்-அப் போதுமானது. வாட்டர் ப்ரூஃப் ஹைலைனர், காஜலுக்கு உடனடியாக மாறிவிடுங்கள். பாரம்பரியமான பந்தானி, ராஜஸ்தானி பிரின்ட்ஸ்களைத் தவிர்த்துவிடுங்கள். மழையால் பிரின்ட்ஸ் பாதிப்படைய வாய்ப்பிருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x