கண்டபடி கண்டுபிடி: மூட்டையில என்ன இருக்கு?

கண்டபடி கண்டுபிடி: மூட்டையில என்ன இருக்கு?
Updated on
1 min read

1. ராஜாவும் ராணியும் சுற்றுலா போறாங்க. அவங்களுக்கு மூன்று மகன்கள். எல்லா மகன்களுக்கும் கல்யாணம் ஆயிடுச்சி. அந்த மகன்களுக்கு மூன்று மகள்கள் இருக்காங்க. அப்படீனா சுற்றுலாவுக்கு மொத்தம் எத்தனை பேர் போயிருப்பாங்க?

2. ஒரு ஆள் நிலத்தப் பார்த்துப் போயிக்கிட்டிருக்காரு. அவர் கிட்ட ஒரு மூட்டை இருக்கு. அதைப் பிரிக்காம இருந்தா, அவர் இறந்திடுவார். அப்படி அந்த மூட்டையில என்னதான் இருக்கு?

3. இருபத்தி இரண்டை சீனாவில் எப்படிச் சொல்லுவாங்க?

4. ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்குள் திருடன் புகுந்து கடை மேலாளரைக் கல்லாப் பெட்டியோட ‘கோட் வேர்ட்’டை (code word) சொல்லும்படி மிரட்டுகிறான். “இந்தக் கல்லாப் பெட்டிக்கான கோட் வேர்ட் தினந்தோறும் மாறும். என்னை மட்டும் அடிச்ச, உனக்கு எப்பவுமே அந்த கோட் வேர்ட் தெரியாம போயிடும்” என்கிறார் மேலாளர். ஆனால், அந்த கோட் வேர்டைத் திருடன் சட்டெனக் கண்டுபிடித்துவிடுகிறார். எப்படி?

5. மேலே உள்ள ஆங்கில எழுத்துகளில் என்ன தப்பா இருக்கு?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in