

வி
தவிதமான ஸ்டைகளில் உடை அணியும் பழக்கம் இளைஞர்களிடையே வேகமாகப் பரவி வருகிறது. திருமணம், பிறந்த நாள், பார்ட்டி என நிகழ்வுகளுக்குப் பொருத்தமாகத் தனித்தனியாக ஆடை அணியும் பழக்கமும் அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப நிகழ்வுகளுக்கென்று தனியாக ஆடை வடிவமைக்கும் ட்ரெண்டும் இன்று உருவாகிவிட்டது. புதுப் புது ட்ரெண்டுகளை ஆடை வடிமைப்பாளர்கள் உருவாக்கிவருகின்றனர். இதற்கு முக்கியக் காரணமாக இருப்பவர்கள் பிரபலங்கள்தாம்.
பெரும்பாலும் சினிமா பிரபலங்களே ஆடை தொடர்பான புதிய ஸ்டைலைப் படத்திலோ தனிப்பட்ட முறையிலோ வெளிச்சத்துக்குக் கொண்டு வருகிறார்கள். அந்த ஆடையுடன்கூடிய தங்களது ஒளிப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிடுகிறார்கள். அந்த ஒளிப்படங்களிலிருந்து கிடைக்கும் ஸ்டைலையே யூத் ஐகான் ஆக மாற்றிவிடுகிறார்கள். அந்த வகையில், புதுப் புது ஸ்டைலில் அசத்தும் சில புகழ்பெற்ற பிரபலங்கள்:
தீபிகா எப்போதுமே ஒரு ட்ரண்ட் செட்டர். புதுவிதமான ஆடை அணிவதிலும் ஆர்வம் கொண்டவர். அவரது ஒவ்வோர் ஆடையுமே இதற்கு முன்பு பார்த்திராத டிசைனாகத்தான் இருக்கும். அண்மையில் ‘ஆல் அபவுட் யூ’ என்ற பெயரில் ஆன்லைனில் ஆடை வடிவமைப்பைத் தொடங்கியிருக்கிறார்.
தமிழ், இந்தியில் எந்த அளவுக்கு இவரது ஸ்டைல் புகழ்பெற்றதோ, அதே அளவுக்கு ஹாலிவுட்டிலும் புகழ்பெற்றவர். தினந்தோறும் இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தைப் பார்த்தாலே இதைத் தெரிந்துகொள்ளலாம். பலவகையான ஆடைகள், அதற்கேற்ற மேக்கப்களையும் தொடர்ந்து பார்த்தால், புதிய ஸ்டைலான ஆடை அணியும் பழக்கத்தை இவரிடமிருந்து எளிதாகக் கற்றுக்கொள்ளலாம்.
பெண்கள் மட்டும்தான் மேக்கப்களில் கவனம் செலுத்துவார்கள் என்று நினைத்தால், அது முற்றிலும் தவறு. விளையாட்டு வீரர்களிலேயே தோற்றப் பொலிவுக்கு அதிக முக்கியத்துவம் தரும் வீரர்களில் ஒருவர் விராட் கோலி. புதுமையான ஆடை அணிவதிலும் சரி, சிகையலங்காரம் செய்துகொள்வதிலும் சரி, விராட் கோலிக்கே முதலிடம். அவரது இன்ஸ்டாகிராமைத் தொடர்ந்து பார்ப்பவர்களுக்கு இது புரியும்.
தமிழில் சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் ஜனனிக்கு ரசிகர் பட்டாளம் அதிகம். குறிப்பாக, இன்ஸ்டாகிராமில் அதிக ரசிகர்கள் உண்டு. இவர் புதுமையான உடைகளில் எடுத்த ஒளிப்படங்களைப் பதிவிடுவதைத் தாண்டி, அவரது ஒவ்வோர் உடையை வடிவமைத்தவர்களின் தகவல்கள் முதற்கொண்டு அனைத்தையும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுவருகிறார். இவரது ஸ்டைலில் பெரும்பாலும் தமிழ் கலாச்சாரம் பளிச்செனத் தெரியும். மேற்கத்திய, ஃப்யூஷன் ஸ்டைல் ஆடைகளையும் விரும்பி அணிபவர் ஜனனி.
சமீபத்தில் வெளியான ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் நாயகன்தான் விஜய் தேவாரகொண்டா. இளைய தலைமுறை நடிகர் என்பதற்கேற்ப, இவரது ஸ்டைலும் தனித்துவமாகத் தெரியும். இவர் அதிகமாக ஃப்யூஷன் ஸ்டைலைத்தான் பின்பற்றுகிறார். இவரது தோழி ஆடைகளை வடிவமைப்பதாக இன்ஸ்டாகிராம் பதிவுகளில் குறிப்பிட்டுள்ளார்.