

பேட்ரோன் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? இது ஒரு கணினி ‘மவுஸ்’. வழக்கமாகக் கணினி ‘மவுஸ்’ என்பது வயர் மூலம் கணினியுடனே இணைக்கப்பட்டிருக்கும். ஆனால், இந்த ‘ரிங் மவுஸ்’ முற்றிலும் மாறுபட்டது. ‘பேட்ரோன் ரிங் மவுஸ்’ (padrone ring mouse) எனப் பெயரிடப்பட்டுள்ள இதை, மோதிரம் போல விரலில் அணிந்து கொள்ளலாம்!
விரலை மேசையின் மீதோ அல்லது மேற்பரப்பிலோ நகர்த்தும் போது ‘மவுஸ்’ வேலை செய்யத் தொடங்கிவிடும். ‘கீ போர்’டில் டைப் செய்துகொண்டே தேவைப்படும்போது விரலை மேசையில் நகர்த்தி நம் வேலையை முடித்துவிடலாம். இந்த ‘மவுஸ் ரிங்’கை புளூடூத் வழியாக கணினியுடன் இணைத்தால் போதும். கணினிக்கும் ‘ரிங் மவு’ஸுக்கும் இணைப்பு கிடைத்துவிடும்.
வழக்கமான மவுஸைக் கொண்டு என்னென்ன செய்ய முடியுமோ, அவற்றையெல்லாம் ‘ரிங் மவுஸ்’ மூலமும் செய்ய முடியும். இந்தப் புதுமையான மவுஸை சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த மார்க் ஸ்பெக், நிக்கோலஸ் ரிச்சட்லி, தாமஸ் ஸ்டஃப்பர் ஆகியோர் ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்றைத் தொடங்கி உருவாக்கியுள்ளனர்.
- சந்தியா. த, பயிற்சி இதழாளர்