

எதிர்பாராத விதமாக உங்கள் மொபைல் தண்ணீரில் விழுந்துவிட்டால் என்ன செய்வீர்கள்? மொபைலை நன்றாக உதறுவீர்கள் அல்லவா? அது தவறு. நீங்கள் அப்படிச் செய்வதால் என்ன ஆகும் தெரியுமா? ஓரளவு வெளியே இருக்கும் தண்ணீரும் உள்ளே செல்ல வாய்ப்பிருக்கிறது.
நீங்கள் வாங்கிய மொபைல் தண்ணீரில் விழுந்த பதற்றத்தில் நீங்கள் செய்யும் இந்தக் காரியம் உங்கள் மொபைல் பழுதடையக் காரணமாகிவிடும். அப்படியானால் இதற்கு என்னதான் வழி? இதற்கு தீர்வு கூகுளில் உள்ளது.
# உங்கள் மொபைலில் உடனடியாக https://fixmyspeakers.com/ என்கிற இணையத்தளத்துக்குச் செல்லுங்கள்.
# அதில் ‘Eject water from your phone's speakers after getting it wet’ எனும் வாக்கியத்துக்குக் கீழ் உள்ள பட்டனை அழுத்துங்கள்.
# அப்போது வரும் ‘பீப்’ ஒலி உங்கள் ஸ்பீக்கரில் வெளிப்படும் ‘Bass’ அளவை அதிகமாக்கி, அதனால் ஏற்படும் அதிர்வின் மூலம் தண்ணீரை வெளியேற்றும்.
# இதை தொடர்ச்சியாக 4 அல்லது 5 நிமிடங்களுக்கு மேல் செய்தால் மொபைலின் உள்ளே உள்ள தண்ணீர் முழுவதுமாக வெளியேறிவிடும்.
# இதன் பின்பு சுத்தமான துணியில் துடைத்து, ஈரப்பதம் போக உலர்த்திவிட்டு, எப்போதும் போல மொபைல் போனைப் பயன்படுத்தலாம்.
- சுரேஷ். ஜி