

கா
தலர் தினம் அன்று இதயங்களை மட்டுமல்ல பரிசுகளையும் பரிமாறிக்கொள்கிறார்கள் காதலர்கள். இதுவரை யாரும் கொடுக்காத புதுமையான பரிசு பொருட்களை தேடி அலைவதிலும் காதலர்களுக்கு அலாதிப் பிரியம்தான். எந்தப் பரிசு பொருள் கொடுத்தாலும், அதோடு சேர்த்து ஒரு சாக்லெட்டையும் சேர்த்துக்கொடுப்பது காதலர்களின் வழக்கம்.
அந்த வகையில் சாக்லெட்டையே பரிசாக மாற்றி இருக்கிறார் கோவையைச் சேர்ந்த சுஜாதா சிவகுமார். கேக், சாக்லெட் ஆகியவற்றை வீட்டிலேயே செய்து விற்பனை செய்துவரும் இவர், காதலர் தினத்துக்காக சாக்லெட் வடிவிலான தாஜ்மகால், இதய வடிவ சாக்லெட், மணப்பெண்ணை பல்லக்கில் தூக்கிச்செல்லும் சாக்லெட், சாக்லெட் கிப்ட் பாக்ஸ், இதழ் வடிவில் செய்யப்பட்ட சாக்லெட், சாக்லெட்டில் செய்யப்பட்ட கம்மல், டலார் என காதலர்களுக்கு சாக்லெட்டை முழுமையாக டெடிகேட் செய்திருக்கிறார்.
காதலர்களுக்கான புதுமையான சாக்லெட்டுகளை இளைஞர்கள் மத்தியில் பிரபலப்படுத்த “The Sweet Pop -Chocs N Cakes” என்ற பெயரில் ஃபேஸ்புக் பக்கத்தையும் தொடங்கியிருக்கிறார் சுஜாதா.
படங்கள்: ஜே.மனோகரன்