

பெ
ரிய பெரிய நைட்ரஜன் பலூன்களை வெளிநாடுகளில் சகஜமாகப் பறக்கவிடுவார்கள். சென்னை லயோலா கல்லூரியில் அண்மையில் இப்படிப்பட்ட பிரம்மாண்ட பலூன்களை ஒரு நாள் இரவில் பார்க்க நேர்ந்தது. இந்திய தேசியக் கொடியின் மூவர்ண நிறம் கொண்ட பலூன்கள், பலவிதமான வண்ண பலூன்கள் என அந்த இடமே பலூன்களால் நிறைந்துகிடந்தன.
இரவில் பல வண்ண நிறங்களில் பலூன்கள் ஜொலித்த காட்சியைப் பார்த்த சென்னைவாசிகள் பிரமிப்பில் மூழ்கினார்கள். சென்னைவாசிகளுக்கு இது புத்தம் புதிய அனுபவம். தமிழக சுற்றுலாத் துறை சார்பில் இந்த பலூன்கள் சென்னை வந்திருந்தன. விரைவில் சென்னைவாசிகளும் இந்த பலூன்களில் பறக்கும் நிலை வரலாம்.